பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி இரக்கம் முருகனை வாழ்த்தி வாழ்கின்ற வாழ்வு கைவரும் தொண்டு என்று சொன்ன அருணகிரியார் இப்போது மிகவும் இன்னலைப் பெற்று ஹடயோகம் செய்பவர்களைப் பார்த்து இரங்குகிறார். யாரேனும் ஒருவருக்கு ஒரு காரியம் எளிதில் கைவரப் பெற்றால், அதனை முடிப்பதற்கு மிகவும் தொல்லைப்பட்டுக் கொண்டிருப் பவர்களைப் பார்த்துச் சற்று எள்ளி நகையாடத் தோன்றும். "ஐயோ! இப்படித் துன்பப்படுகிறீர்களே; நான் செய்த மாதிரி செய்தால் காரியம் எளிதில் கைகூடிவிடுமே" என்று இரங்கவும் தோன்றும். அந்த வகையில் இறைவன் திருவருளைப் பெறுவதற்கு, யோக மார்க்கத்தைக் கைப்பிடித்து எளிதில் கைகூடாமல் துன்பப் படுகிறவர்களைப் பார்த்து அருணகிரியார், இறைவனை எண்ணி உருகி அன்பு செய்யும் வழி இருக்கும்போது இப்படித் துன்பப் படுகிறீர்களே என்று இந்தப் பாட்டில் இரங்குகிறார். பக்தியில் ஈடுபட்டுப் படிப்படியாகத் தியானம் செய்து அநுபவத்தில் உயர்ந் தவர்கள் யோக மார்க்கத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது இல்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் யோகத்தைப் பாராட்டு வது வழக்கம் அன்று. கலம்பகம் என்ற தமிழ்ப் பிரபந்தத்தில் யோகிகளைப் பரிகசிப்பதாக ஒரு துறை உண்டு. அதற்குக் காரணம்: யோகம் செய்வதாக எண்ணிக்கொண்டு பலர் இடை யில் சோரம் போய்விடுகிறார்கள். மனத்தை இறைவனுடைய திருவடியில் வைக்காமல், சுவாச பந்தனம் செய்து அதனாலே எல்லாம் அடைந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். யோகம் உண்மையில் இந்த நாட்டில்தான் யோகத்தை நன்றாக உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். மற்ற நாட்டில் பக்தி இருக்கும். ஆனால் உடலில் உள்ள நாடி நரம்புகளைச் சுத்தம் செய்து