பக்கம்:கனவுப்பாலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கனவுப் பாலம் கிஜிடிா சிரித்தாள். ஏன் சிரிக்கிறீர்கள்??? ‘நன்மையா? எங்களுக்கா? நன்மையைக் காட்டிலும் தீமைதான் அதிகம். எங்கள் செர்ரி ப்ளாலத்தின் நோக்கம் மனிதாபிமானத்தின் மீது எழுந்தது. உங்கள் கம்பெனியின் நோக்கம் பொருளாதார ரீதியானது. இதில் யாருக்கு நன்மை!’ * . . . . 'இன்று உலகத்தையே ஆட்டிப் படைப்பது ஆயில்: அந்த ஆயில் உங்கள் நாட்டிலேயே கிடைக்கிறது என்ருல் அது உங்களுக்குத்தானே நன்மை.’’ ேெடாக்கியோவின் சுகாதாரத்தைக் கெடுத்தது டோதாதா? ஒரு லட்சம் புகை போக்கிகளால் அந்த நகரமே நாசமாகி விட்ட்து.” - 'டோக்கியோ நன்ருகத்தானே இருக்கிறது? நீங்கள் சொல்வதுபோல் இல்லையே!?? - 'இப்போது இல்லே என்ருல் அதற்கு எங்கள் இயக்கம் தர்ன் காரணம். பத்து வருடங்களுக்கு முன் டோக்கி யோவில் பரவிய விஷ வாயு பல்லாயிரக் கணக்கான பேரை பலி வாங்கி விட்டது. - அரண்மனையைச் சுற்றி நின்ற பைன் மரங்களும். செர்ரி மரங்களும் அழிந்து போயின. கெய்ஷாக்களிள் மதிப்பு மிக்க கிமோனே உடைகளின் பளபளப்பு மங்கிப் போயின. ஒரு காலத்தில் வாஷிங்டன் நகருக்கு செர்ரி மரங்களே அன்பளிப் பாய்த் தந்த ஜப்பான்-பின்ைெரு சமயம் அவர்களிடமே அந்தச் செடிகளைக் கேட்டு வாங்க.வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டோம். இந்த நாட்டின் காற்று, சண்ணிர், சூழ்நிலை இவற்றின் தூய்மைதான் எங்களுக்கு முக்கியம்.’ படகு ஏறி அந்தத் தீவை அடையும் போது மணி ஐந்தாகிவிட்டது. எபோர்த்தீர்களா? எவ்வளவு அழகான தீவு இது? இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே சூரியன். அஸ்தமிக்கும். ஜாலத்தைக் காணப் போகிறீர்கள்.:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/16&oldid=768608" இலிருந்து மீள்விக்கப்பட்டது