பக்கம்:கனவுப்பாலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 41 ஆடைகள். பணக்காரத்தனம். யாரோ ஒரு பெரிய பணக் காரனுக்கு வாழ்க் கைப் பட்டிருக்கிருள். கொஞ்சம் ஒல்லி. எளிதில் யாரிடமும் பழகிவிட மாட்டாள். கேட்டால் பதில் கிடைக்கும் என்று நிச்சயமில்லே. ... " இடது பக்கம். இருபது வயதில் ஒரு பெண். அழகிய முகம். கவர்ச்சியான உடல். கால்மீது கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். சிலே வடிவம்போல் வலிமையான கால்கள். தொடைகளின் மீது இறுக்கமாகப் பூசிய மாதிரி கவுன். கெளதம் - மூன்று குழந்தைகளின் தகப்பன், அவள் தொடைகளேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். . - ஆறு மணி அடித்தது. ஒன்றும் நடக்கவில்லே. நிசப்தம். மெளனத்தை ஒருவருமே கலைக்கவில்லை. கெளதம் பொறுமை இழந்தான். உள்ளத்தில் கோபம் பொங்கியது. அந்த நாலு பேரும் தன் இனப்போல் அழைக்கப் பட்டவர்கள் தான் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லே. எதற்கு இப்படி எல்லோரையும் அழைத்து உட்கார வைத்திருக்கிறர்கள்? இடது பக்கம் திரும்பி அந்தப் பெண்ணப் பார்த்து, எக்ஸ் யூஸ் மி! உங்களுக்கு அழைப்பு வந்ததா? அதற்காகத்தான் வந்திருக்கிறீர்களா? என்று கேட்டான். - ஆமாம்” என்ருள். அவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. - யோர் நம்மை அழைத்ததென்று ஏதாவது தெரியுமா? தெரியாது; எல்லாம் மூடுமந்திரமாக உள்ளது. நான் வரவேண்டாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆல்ை கடிதத்தில் ரொம்ப முக்கிய விஷயம் என்று குறிப்பிட்டிருந் தது. என் ஆவலே அடக்க முடியவில்லை. செலவுக்கு எழுப தாயிரம் யென் பணம் வேறு அனுப்பி யிருந்தார்கள். எப்படி வராமலிருக்க முடியும்? வந்து விட்டேன்.’’ * , 'எங்கிருந்து வருகிறீர்கள்? . :நகோயா.:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/37&oldid=768630" இலிருந்து மீள்விக்கப்பட்டது