பக்கம்:கனவுப்பாலம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாவி,

7

அந்தக் கிழவியும் அவளும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார்கள். அனுதாபத்தோடு அவனைப் பார்த்தார்கள் "பரவாயில்லை, ஆக்ஸிடெண்ட்" என்றார்கள் மறுபடியும்.

இளைஞன் பிடிவாதமாகப் பணத்தை எடுத்துக் கொடுத்து, அந்த ஜாடியை அட்டைப் பெட்டியில் கட்டிக் கொடுக்கச் சொன்னான்.

கிழவி அந்த மூடிச் சிதறல்களை ஒன்றுவிடாமல் ஜாடிக்குள் வைத்துக் கட்டினாள். அதன் மீது பூப்போட்ட காகிதத்தால் சுற்றி, "கம் டேப்" ஒட்டி, ஊதா ரிப்பனால் சுற்றினாள். ஏதோபரிசு கொடுப்பதுபோல் அதை அவனிடம் எடுத்துத் தந்துவிட்டு மூன்று முறை குனிந்து வணங்கினாள்.

அப்போது தான், வெளியே போயிருந்த அயாகோ உள்ளே நுழைந்தாள். இவனைக் கண்டு விட்டு "கோபால்! ஸாரி, ஸாரி! உங்களைக் காக்க வைத்துவிட்டேன்" என்று கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். சின்ன ஸீக்கோ க்வார்ட்ஸ் 7.20 காட்டியது.

"இதென்ன பார்ஸல்? இங்கே ஏதாவது வாங்கினீர்களா?"

"ஆமாம்; இந்த ஜாடியின் மூடியைக் கைதவறி உடைத்து விட்டேன். உன் கடையில் ஒரு வியாபாரம் செய்த மாதிரி இருக்கட்டும் என்று இதை வாங்கினேன். இந்தா இது உனக்குத்தான். நான் தரும் பரிசு!"

"எனக்கு வேண்டாம். இதை நீங்கள் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லுங்கள்" என்றாள். "இந்தியாவுக்குக் கொண்டு போய் யாரிடம் தருவது?" "உங்கள் மனைவியிடம்..."

"எனக்கு இன்னும் மணமாகவில்லை!" அவள் அதை வாங்கிக் கொண்டாள். "கொஞ்சம் இருங்கள்; இதோ வந்து விடுகிறேன்: என்று பின் பக்கம் விரைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/5&oldid=1064403" இலிருந்து மீள்விக்கப்பட்டது