பக்கம்:கனவுப்பாலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கனவுப் பாலம் மணி ஆறுக்கு மேல் ஆகியிருந்ததால் தெருவில் ஆபீஸ் விட்டுப் போகிறவர்கள் நடமாட்டம் அதிகமாயிருந்தது. அந்த எக்ஸிகியூட்டிவ் ஒரு சந்திலிருந்து வெளிப்பட்டான். கெளதம் வரைந்து கொடுத்த உருவத்தைப் போலவே இருந்தான். அடர்ந்த புருவம், பீர் தொந்தி. தொந்தியைக் கீழே சரியாமல் நிறுத்திய பெல்ட். அவன் ஒரு டாக்ளியை அழைத்து ஏறிக் கொண்டு விர்ரெனப் பாய்ந்தான். அந்த டாக்ளி கபூகி தியேட்டரைக் கடந்து கிழக்குப் பக்கம் திரும்பியது. இன்ஸ்பெக்டர் அவனைப் பின் தொடர்ந்தார். டாக்ஸி ஒரு பிரிட்ஜுக்கடியில் புகுந்து உடனடியாக இடது. பக்கம் திருப்பி ஒரு பார் வாசலில் போய் நின்றது. அந்த எக்ஸிகியூடி வ் இறங்கி உள்ளே போன்ை. மூலேயாக ஒரு நாற்காலி பிடித்து உட்கார்ந்து கொண்டு லண்ட்டோரி. விஸ்கி கொண்டு வரச் சொன்னன். இன் ஸ்பெக்டர் மெதுவாக நடந்து பாருக்குள் சென்றவர் நாற்காலிகள் நிரம்பியிருப்பதைக் கண்டார். ஸர்விஸ் கெளண்ட்டரில் போய் சாய்ந்து நின்று சூழ் நிகலயை ஒரு முறை கண்னேட்டமிட்டார். காலண்டர் கன்னியின் நிர்வாணத்தை இலவசமாய் ரசித்தார். ஒரு பீர் வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அந்த ஆசா மியைத் திரும்பிப் பர்ர்த்துத் கொண்டிருந்தார். அவன் தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ ஜோக் அடித்துப் பெரி. தாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

இந்த ஆள் கொலை செய்திருப்பாகு? இப்படி வெகுளி யாய் சிரிக்கிருனே?’ என்று சம்சயித்தார். -

லண்ட்டோரி குடித்துக் கொண்டிருந்த அவன் சட்டெ ன்று பாதியில் எழுந்து வெளியே கிளம்பி விட்டான். ஒருவேளை தான் ஒரு போலீஸ் இன் ஸ்பெக்டர் என்பதைத் த்ெரிந்து கொண்டு நழுவுகிற்னே? வேகமாய் நடந்து தெரு முனையிலிருந்த இன்னுெரு யாருக்குள் அவசரமாய்ப் புகுந்து விட்டான். இன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/56&oldid=768651" இலிருந்து மீள்விக்கப்பட்டது