பக்கம்:கனவுப்பாலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கனவுப் பாலம் அது கவர்ன்மெண்ட் சமாசாரம், நான்.போலீஸ். ஆபிசர். நோ கமெண்ட்ஸ்!?? என்ருர் இன்ஸ்பெக்டர். இண்ட ஸ்ரீட்ஸ் மினிஸ்டரை நான் சந்திச்சப்போ என்னிடம் தெளிவாச் சொன்னரே. இத பாருங்க கோபால்: ஜப்பானுக்கு ஆயில் தேவை. இங்கே ஆயில் ரொம்பக் குறைச்சலாத்தான் இருக்குது. அதையும் எடுக்கலேன்ன நஷ்டம் இந்த நாட்டுக்குதான். ஆல்ை ஆயில் எடுப்பதற்கு இந்த ஸ்குரா பெரிய இடைஞ்சலாயிருக்குது. ஸ்குரா ஒப்புக் கொண்டால் நான் உடனே பர்மிஷன் கொடுத்துடுவேன். எதுக்கும் நீங்க கிஜி மாவைப் பார்த்துப் பேசுங்களேன்’’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினரே! இப்ப திடீர்னு ஏன் இப்படி பல்டி அடிக்கிறர்? சரிதான். இப்ப கிஜிமா இல்லை. நானும் போலீஸ்ல மாட்டிக் கிட்டேன்! அதனுலே இனி கேட்பார் இல்லேன்னு நினைச் சிருப்பார். எங்க கம் பெனிக்குப் போட்டியா அமெரிக்காவிலேருந்து LI 6) கம்பெனிங்க போட்டி போடருங்க. அவங்க என்ன வேன. செய்வாங்க. இந்த இண்டஸ்ட்ரீஸ் மினிஸ்டர் அவங்க வலையிலே சிக்கிட்டார்னுதான் நினைக்கிறேன்.” -

  • நீங்க போய் அவரைப் பார்த்துப் பேசுங்களேன்...?? பேசத்தான் போறேன். இப்ப எனக்கு ஆயில் கூட முக்கியமில்லை. அயாகோதான் முக்கியம். ஸ்குரா இயக் கத்தை அந்த அயாகோ மூலம் முடுக்கி விட்டு இந்த நாட் டிலேருந்து யாருமே ஆயில் எடுக்க முடியாதபடி செய்யறன, இல்லேயா பாருங்க..??

நோன் சர்க்கார் உத்தியோகம் பார்க்கிறவன். என்னிடம் இதெல்லாம் சொல்லாதீங்க. உங்களே வேணு இப்பவே விடுதலை செய்துட்றேன். நீங்க போகலாம். குட்பை' என்று கை குலுக்கி அனுப்பினர் இன்ஸ்பெக்டர். கோபால், டாக்ஸி பிடித்து அயாகோவைத் தேடிச் சென்ற போது அவள் கடையில் இல்லை. - - ஸ்குரா ஆபீஸுக்குப் போயிருப்பதாகக் கடையில் உட்கார்ந்திருந்த கிழவி சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/68&oldid=768664" இலிருந்து மீள்விக்கப்பட்டது