பக்கம்:கனவுப்பாலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 உதவித் தலைவர் இஸாவா, ஸ்குரா இயக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வருபவர், தொழிலமச்சரின் நெருங்கிய் நண்பர். கிஜிமா தலைவியாக இருந்த வரை செயலற்றுக் கிடந்தார். இப்போது அவரைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு, அந்த இயக்கத்தையே ஒடுக்கி விட இரகசிய திட்டம் இட்டிருந்தார் தொழிலமைச்சர். - . அன்று மாலே ஸ்குரா அலுவலகத்தில் பொதுக்குழு கூடி யிருந்தது. முக்கியமான கூட்டமானதால் ஒரிருவரைத் தவிர அங்கத்தினர்கள் எல்லோருமே வந்திருந்தனர். 1. தலைவி கிஜி மாவின் மறைவுக்கு அனுதாபம். 2, புதிய தலைவர் தேர்தல். . . இந்த இரண்டு ஐட்டங்கள் மட்டுமே நிகழ்ச்சி நிரலில், இடம் பெற்றிருந்தன. - - - தலைவரின் நடுநாயகமான ஆசனம் காலியாக இருந்தது. அதை நிரப்ப கிஜிமா இப்போது இல்லே, அதற்கு வலது பக்கத்தில் உபதலைவர் இஸாவாவும்: இடது பக்கத்தில் அயாகோவும் அமர்ந்திருந்தனர். கிஜிமாவின் பிரிவால் சபைகளை இழந்து காணப்பட்டது. பார்வையாளர்களுக்கென தனியாக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் கோபால் தனியாக உட்கார்ந்து கொண்டான். இயக்கத்தின் செயற்குழு அங்கத்தினர் என்ற முறையில் கெளதமுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கெளதம் இரண்டு நிமிடங்களில் வந்து சேர்வதாக டெ லி' போன் செய்திருந்தான். அவன் வந்ததும் பிரார்த்தன்யுடன், கூட்டம் ஆரம்பமாயிற்று. - - அடுத்து கிஜிமாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் எல்லோரும் எழுந்து நின்று இரண்டு நிழிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். ‘. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/71&oldid=768668" இலிருந்து மீள்விக்கப்பட்டது