பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 59 "தோளையே சொல்லு கேனோ! சுடர் முகத்து உலவுகின்ற வாளையே சொல்லுகேனோ, அல்லவை வழுத்து கேனோ! மீளவும் திகைப்பது அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்; நாளையே காண்டி அன்றே, நான் உனக்கு உரைப்பது என்னோ” என்று கூறி நெருப்புக்கு நெய் ஊற்றுகிறாள். இன்னும் விவரிக்கிறாள், "வில்ஒக்கும் நுதல் என்றாலும் வேல்ஒக்கும் விழி என்றாலும், பல்ஒக்கும் முத்தென்றாலும், பவளத்தை இதழ் என்றாலும், சொல்ஒக்கும், பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ நெல்ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்தாக வற்றோ’’ என்று உவமைகளைக் கூறுகிறாள். "இந்திரன் சசியைப் பெற்றான்; இருமூன்று வதனத் தோன் தன் தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும் செந்திரு மகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும், அந்தரம் பார்கின், நன்மை அவர்க்கில்லை, உனக்கே ஐயா !” என்று கூறி இராவணன் உள்ளத்தில் சீதையின் நினைவை வலுவாக ஊட்டி விடுகிறாள். 'பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்; மேகத்தில் மின்னை முன்னே வென்ற நுண் இடையினாளை மாகத்தோள் வீரபெற்றால் எங்ங்ணம் வைத்து வாழ்தி?” சிவன் உமையைத் தன் மறுபாகத்தில் வைத்துக் கொண்டான், திருமால் திருமகளைத் தன் மார்பில் வைத்துக் கொண்டான், பிரம்ம தேவன் கலைமகளைத் தனது நாவிலே வைத்துக் கொண்டான். மேகத்திலே தோன்றும் மின் வெட்டுகளைப் போன்ற நுண்ணிடை யாளான அச்சீதையை வானளாவிய உயர்ந்த தோள்களையுடைய வீரனாகிய நீ எங்ங்ணம் வைத்து வாழப்போகிறாய் என்றெல்லாம் கூறி இராவணனுக்கு ஏற்பட்டுள்ள பெருங்காதலை மேலும் தூண்டுகிறாள். இன்னும் 'பிள்ளை போல் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்கல் ஆற்றாய்! கொள்ளைமா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய!