பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 66 அழகிய தோற்றத்தைக் கண்டான். அது வெறும் உருவெளித் தோற்றம் தான். இராவணன் தனது மனக்கண்ணில் சிந்தனையில் சீதையைக் கண்டு பேசிக் கொள்கிறான். “பண்டே உலகேழிலும் உள்ள படைக்கணாரைக் கண்டேன்! இவர் போல்வதொர் பெண் உருக் கண்டிலேனால்; உண்டே எனின் வேறினி, எங்கை உணர்த்தி நின்ற வண்டேறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே’’ என்று அவனுக்கு சூர்ப்பனகை எடுத்துக் கூறிய வர்ணனை களெல்லாம் நினைவுக்கு வருகின்றன. சூர்ப்பண கையை அழைக்கிறான். என்முன் வந்து நிற்கிறாளே இவள் தான் நீ கூறிய சீதையோ’’ என்று கேட்கிறான். 'பொய் நின்ற நெஞ்சின் கொடியாள், புகுந்தாளை நோக்கி, நெய்ந்நின்ற கூர்வாள் அவன், நேர்உற நோக்கு நங்காய்! மைந்நின்றவாள் கண் மயில் நின்றென, வந்து என்முன்னர், இந்நின்றவள் ஆம்கொல் இயம்பிய சீதை?” என்றான். இராவணனுடைய உள்ளத்தில் சீதை இருக்கிறாள். அச்சீதை மீதுள்ள ஆசையினால் அவன் நிலையிழந்து நிற்கிறான். அவன் தான் காணும் பொருள்களில் எல்லாம் சீதையின் வடிவத்தையே காண்கிறான். மறுபக்கம் சூர்ப்பணகையின் உள்ளத்தில் இராமன் இருக்கிறான். அந்த இராமன் மீதுள்ள ஆசையால் அவளும் நிலையிழந்து நிற்கிறாள். அவள் காணும் பொருள்களிலெல்லாம் இராமனின் வடிவத்தையே காண்கிறாள். இராவணன் சதா சீதை, சீதை என்றே புலம்புகிறான். அதே போல சூர்ப்பனகையும் சதா இராமன், இராமன் என்னும் புலப்பத்திலேயே இருக்கிறாள். இந்த வடிவத்தில் என்முன் நிற்பவள் தான் நீ கூறிய சீதையா என்று இராவணன் சூர்ப்பணகையிடம் கேட்ட போது அவள் இப்படித் தான் இராமன் இருப்பான் என்று தன் உள்ளத்தில் உள்ளதைக் கூறுகிறாள். "செந்தாமரைக் கண்ணொடும், செங்கனி வாயினோடும் சந்தார்தடந் தோளொடும், தாழ்தடர் கைகளோடும்