பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் W 11 விளக்கங்களும் மிக முக்கியம். மொழி நடையை எழுத எழுத அபிவிருத்தி செய்து கொள்ளலாம். கம்ப ராமாயணத்தைப் பற்றியும் இனவாத அடிப்படையில் சிலரிட்ம் கருத்துக்கள் பரவியுள்ளன. அவை அபத்தமானவை. இராமாயணக் கதையை வைத்து ஆரியம் திராவிடம் ப்ேசுவது அபத்தமானது. அதற்கு எந்த விதமான அடிப்படையும் இல்லை வரலாற்று ஆதாரமும் இல்லை. இராமாயணக் கதையின் கருத்துப்படி இராமன் அரச குலத்தை, கூடித்திரிய குலத்தைச் சேர்ந்தவன். இராவணன் பிராமண குலத்தில் பிறந்தவன். அவன் பிரம்மாவின் பேரன். எனவே தமிழ் நாட்டில் பரவியுள்ள தவறான ஆரிய திராவிடக் கருத்தைத் தெளிவு படுத்த வேண்டியது அவசியம் என்று அந்த நண்பர் என்னிடம் கூறினார். மேலும் அவர் ' கம்பராமாயணத்தை வெறும் பூஜை அறைகளிலும் புலவர்களின் பட்டி மன்றங்களிலும் மட்டுமல்லாமல் மக்கள் மன்றங்களிலும் கம்பனுடைய அந்த மகத்தான காவியத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். எனவே நான் குறிப்பிட்ட கம்பன் ஒரு சமுதாயப் பார்வை என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு நூல் எழுதுங்கள்’’ என்று கூறி என்னை ஊக்கமூட்டினார். எனக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டு அது உறுதிப்பட்டு நூல் எழுதுவதற்கு முயற்சிகள் எடுத்தேன். கம்பராமாயணம் போன்ற நூல்களை ஆய்வு செய்து தனி நூல் எழுதுவதற்கு எனது தமிழ் இலக்கியப் புலமையும் கவிதைப் புலமையும் போதவில்லை. எனவே பல தமிழ் இலக்கிய நூல்களையும் படித்தேன். அத்துடன் வேறு பல துறைகளிலும் குறிப்பாக அரசியல், பொருளாதாரம், தத்துவ ஞானம் முதலியவை பற்றிய பல நூல்களையும், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள் பலவும் எழுதியுள்ள அனுபவத்திலும், ஏற்கனவே எனது தாய் தந்தையர் மூலம் நான் பெற்றுள்ள தமிழ் புலமை வைணவ இலக்கியப் புலமை மற்றும் ஞானத்தைத் துணையாகக் கொண்டு கம்பனைப் பற்றிய ஆய்வு நூலை எழுதத் தொடங்கினேன். அந்த நூலுக்கான தோற்றுவாய்க்கான குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது தமிழ்ப் புலவராக உள்ள எனது நண்பர் ஒருவர் அந்தக் குறிப்புகளைப் படித்துப் பார்த்து விட்டு “இது ஒரு புதிய நல்ல அணுகு முறையாக உள்ளது. நூலை எப்படியும் எழுதி முடித்து விடுங்கள்’’ என்று கூறி என்னை மேலும் ஊக்கமூட்டினார் முதலில் சிறிய அளவிலேயே சில கட்டுரைகளின் தொகுப்பைப் போல எழுதலாம் எழுதி முடித்துவிடலாம் என்று கருதியிருந்தேன். ஆனால்,