பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன்

  • . 73 'நாட்செய்த கமலத்து அண்ணல், நல்கின நவையில் ஆற்றல் தோட்செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ? தாட்செய்ய கமலத்தானே முதலினர், தலைபத்து உள்ளார்க்கு ஆட்செய்கின்றார்கள் அன்றி, அறம் செய்கின்றார்கள் யாரே? இராவணன் தவவலிமையும், ஆற்றலும், புகழும் மிக்கவன். அத்தகைய அரிய பேராற்றலையுடைய பத்து தலையனுக்கு நான்முகன் உட்பட தேவர் உட்பட அனைவரும் உட்பட்டு நிற்கிறார்களே யல்லாமல் அறத்தைப் பார்த்துச் செயல்படவில்லை என்று ஜடாயு கூறுகிறான். இனி நீதான் அவனை வென்று அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்னும் கருத்தில் இராமனிடம் பேசுகிறான். இன்னும்

'தெண்டிரை உலகம் தன்னில் செறுநர் மாட்டுஎவல் செய்து பெண்டிரின் வாழ்வார் அன்றே; இது அன்றே தேவர் பெற்றி பண்டுலகு அளத்தோன் நல்கப் பாற்கடல் அமுதம், அந்நாள் உண்டிலர் ஆயின், இந்நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ? இக்கடல் சூழ்ந்த உலகத்தில் பகைவர்களுக்கு ஏவல் செய்து கொண்டு தேவர்களும் பெண்டிரைச் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். உலகளந்த பெருமாளான திருமால் அன்று கொடுத்த பாற்கடல் அமுதம் உண்டிலராயின் அத்தேவர்களுக்கும் இன்றும் உய்யும் வழி இல்லாமல் இருந்திருக்கும் என்றும் கூறுகிறான். இங்கும் திருமால் பெருமை கூறப்படுகிறது. "வம்பு இழைக் கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைகக் கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி கூட்டிக் கொண்டிர் அம்பு இழை வரிவில் செங்கை ஐயன் மீர்! ஆயும் காலை உம்பிழை என்பது அல்லால், உலகம் செய்பிழையும் உண்டோ? அழகிய நங்கையான சீதை வனத்தில் வாழும் போது அவளைத் தனியே விட்டுவிட்டு நீங்கள் ஒரு மானின் பின்னால் போனது தவறாகும். அதனால் குலப்பழியைக் கூட்டிக் கொண்டீர்கள். ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்தால் இதில் உங்கள் பிழை உள்ளதே அன்றி உலகத்தின் பிழை இல்லை. எனவே உலகின் மீது கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது. 'ஆதலால் முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின் காத்லாள் துயரம் நிக்கித் தேவர்தம் கருத்து முற்றி வேதநூல் முறையின் யாவும், விதியுளி நிறுவி, வேறும் தீது,உள துடைத்தி' என்றான் சேவடிக் கமலம் சேர்வான்'