பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 100 > >==== காதலும் பெருங்காதலும் அப்போது சாம்பவான் என்னும் அறிவில் முதிர்ந்த பலவான் அங்கதன் கூறியதைக் கேட்டு வருத்தமடைந்து நீ இறக்க வேண்டாம், நீ இளவரசன், நாங்கள் இறக்கிறோம் நீ மட்டும் போய் உன்தந்தையிடம் நடந்ததைக் கூறிவிடு' என்றான். அப்போது அங்கதன் 冢Q "நீங்கள் எல்லாம் மடிய நான் மட்டும் திரும்பிப்ரீஇ போவது நல்லதல்ல. நம் எல்லோரும் மடிந்தால் ಥ್ರೀ நமது சாவைப் பற்றி யாரேனும் எந்தைக்கும் لاگتیتیپ அவனும் இறக்கக் கூடும். அதைக் கண்டு அவ்வில்லியும் (இராமனும்) இளைய கோவும் வீழ்வது திண்ணம். அச்செய்தி அயோத்திக்குச் சென்றால் பரதனும் பின்னோனும் மற்றவர்களும் ஊரும் செத்து மடிவர். நான் கெட்டேன். சானகி என்று உலகம் சாற்றும் விரதமர் தவத்தின் மிக்க விளக்கினால், உலகத்தில் உள்ள அனைவருக்கும் கரை காணாத துன்பம் விளைந்தது” என்னும் நிலைமை ஏற்பட்டு விடும் என்று கூறி மனம் வருந்தினான். அப்போது அனுமன் தலையிட்டு அனைவருக்கும் அறிவுரை கூறினான். "நாம் தவறு செய்யவில்லை. பிலத்தில் வானத்தில், பொன்வரைக் குடுமிகளில் (மலைகளில், மலை உச்சிகளில்) வேறுள்ள அண்டங் களில், மற்றும் அனைத்திலும் சுற்றித் தேவியைத் தேடினோம் என்று கூறினால் இராமன் நம் மீது குற்றமாகக் கொள்ளமாட்டான். o இன்னும் தேடுவோம். தேடி, அத்தோடலர் குழலி தன் துயரின் சென்று சண்டையிட்டு உயிர் மடிந்த பறவை வேந்தன் சடாயுவைப் போல நாமும் அரக்கர்களுடன் சண்டையிட்டு வீடு பெறுவோம்’ என்று அனுமன் குறிப்பிட்டான். வீடு பேறு என்பது சான்றோருக்கும் மறையோருக்கும் மட்டுமல்ல, வீரர்களுக்கும் வீர சுவர்க்கம் உண்டு என்னும் புதுமைக் கருத்தையும் மனிதருக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட சத் காரியங்களுக்காக உயிர் விடும் போது வீடு பேறு கிடைக்கும் என்னும் ஒரு புதிய தத்துவத்தை அனுமன் மூலமாக இங்கு எடுத்துக் கூறப் படுவதைக் காண்கிறோம்.