பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ \- கம்பநாடன் காவியத்தில் 11 O X-X--- காதலும் பெருங்காதலும் இலங்கை மாதேவியின் எதிர்ப்பு அனுமன் இலங்கையின் கோட்டை அருகில் வந்தான். கோட்டை வாயிலில் காவல் பலமாக இருந்தது. அதனால் வேறு வழியில் கோட்டை மதிலைத் தாண்டுவதற்கு முயன்றான். அப்போது அவனை இலங்கை மாதேவி என்னும் காவல் தேவதை தடுத்தாள். அந்த இலங்கை மாதேவி யார்? “எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள், உல கேழும் தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல் கண்ணாள்; முட்டிப் போரில் மூவுலகத்தை முதலோடும் கட்டிச்சீறும் காலன் வலத்தாள்; கமை இல்லாள்,” “எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் நல்லாள், அவ்வூர்வைகு உறைஒக்கும் நயனத்தாள்; நில்லாய்! நில்லாய்! என்றுரை நேரா, நினையா முன் வல்லே சென்றாள், மாருதி கண்டாள், வருக என்றான் என்று கம்பர் இலங்கை மாதேவியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இன்னும்,'பொங்கு அழல் என்னப் புகைக் கண்ணாள், நெஞ்சம் கல் எனக் கொண்டவள், தெய்வப் படைபல கொண்டவள், இடி முழக்கம் செய்பவள், தகைவு இல்லாள்” என்றெல்லாம் அவளைப் பற்றிக் கம்பன் கூறுகிறார். இவ்விலங்கை மாதேவி பிரம்மதேவன் அருள் பெற்று இலங்கை நகரை காக்கும் பணியை ஏற்றவள். அந்தக் காவல் தெய்வம் அனுமனைக் கண்டதும் அவனை நில்” எனத் தடுத்தாள் அனுமனோ “நான் இவ்வூரைக் காணாமல் போகமாட்டேன்’ என்று கூறினான். அவள் கோபம் கொண்டு அனுமன் மீது ஒரு மூவிலை சூலத்தை ஏவினாள். அனுமன் அதைப் பிடித்து ஒடித்து எறிந்துவிட்டான். பின்னர் அவ்விலங்கை மாதேவி மிக்க கோபம் கொண்டு அனுமனை அடிக்கத் தனது நெருப்பைப் போன்ற கைகளை ஓங்கினாள். ஓங்கிய அக்கைகளைத் தடுத்துப்பிடித்து அனுமன், “என்னே பெண் இவள்” என்று கருதி இவளைக் கொல்லுதல் பிழை” எனக்கூறி அவளுடைய ஒடியா நெஞ்சத்து ஒரு அடி கொடுத்தான். அந்த அடியைத் தாங்க முடியாமல் அவ்விலங்கை மாதேவி இடிபட்ட நாகம் போல் கீழே விழுந்தாள்.