பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 114 ==> காதலும் பெருங்காதலும் இன்னும் எயிறு கடித்து இருகரங்களும் பிசைந்து எழுகிறான். ஆயினும் ஆத்திரம் கொண்ட அனுமன் பின்னர் தன்னுணர்வு பெற்று வந்த காரியத்தை மறந்துவிடக்கூடாது என்று கருதி நிதானமடைகிறான். 'இவன் நிலையும் புல் நிலையகாமத்தால் புலர்கின்ற நிலை’ என்று உணர்ந்து சினம் தணிந்தான். 16. சீதையைக் காணல் மேலும் சீதை இருக்கும் இடம் தேடி அலைந்து கடைசியில் 'கள் உறையும் மலர்ச் சோலை அயல்ஒன்று கண்ணுற்றான்' நலன் அற உணங்கிய நங்கை அச்சோலையில், அசோக வனத்தில் அரக்கியர் சூழ், நலன் அற உணங்கிய நங்கை’’ இருந்தாள். அந்த சோலையில் சீதை இருந்தநிலை பற்றிக் கம்பன் மிகவும் அற்புதமான, சோகம் மிக்க தமிழ் வரிகளில் குறிப்பிடுகிறார். 'துயில் எனக், கண்கள் இமைத்தலும் முகித்தலும், துறந்தாள், வெயில் இடைத்தந்த விளக்கு என ஒளியிலா மெய்யாள்; மயில் இயல் குயில் மழலையாள், மான் இளம் பேடை அயில் எயிற்று வெம்புலிக்குழாத்து அகப்பட்டது அன்னாள்' 'விழுதல், விம்முதல், மெய்யுற வெதும்புதல், வெருவல், எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித் தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல், அழுதல் அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்வது அறியாள்' இந்த நிலையில் சீதை மிக்க கவலை கொண்டு இருப்பதைக் கம்பன் சோகமாகக் குறிப்பிடுகிறார்.