பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 143 போல வேத நன்னூல் உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி |ற்ெபான் தான். சானகியைக் கண்ட தன்மையை அனுமன் இராமனிடம் எடுத்துக் கூறுகிறான். "மாண்பு இறந்து அமைந்த கற்பின் வாள்நுதல், நின்பால் வைத்த சேண் பிறந்து அமைந்த காதல்,கண்களில் தெவிட்டித் தீராக் காண் பிறந்தமையால், நீயே கண் அகல் ஞாலம் தன்னுள் ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனை ஆதி அன்றே’’ என்று. 'தையலை வணங்கற் கொத்த இடம் பெறும் தன்மை நோக்கி, ஐய! யான் இருந்த காலை; அலங்கல் வேல் இலங்கை வேந்தன் எய்தினன்; இரந்து கூறி இறைஞ்சினன்; இருந்து நங்கை வெய்துரை சொல்லச் சீறிக் கோறல் மேல் கொண்டு விட்டான்' (கொல்லத் துணிந்தான்) அப்போது, 'ஆயிடை அணங்கின் கற்பும், ஐயநின் அருளும், செய்ய தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்பப் போயினன், அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்று ஆங்கு ஏயினன்; அவர்எலாம் என் மந்திரத்து உறங்கி இற்றார்” என்றும் சீதையின் கற்பு நிலையை உறுதிப்படுத்தும் வகையில் அசோக வனத்தில் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இராவணன் வந்து கெஞ்சியதையும் சீதை அவனை மறுத்து கூறியதையும் அனுமன் விவரித்துக் கூறுகிறான். அனுமன் சீதா பிராட்டி கொடுத்த மாமணியை அந்தச் சூடா மணியை இராமனுடைய கையில் கொடுத்தான். இந்த அற்புதமான காட்சியைப் பற்றிக் கம்பன் எடுத்துக் கூறுவது நம்மையெல்லாம் உடல் சிலிர்க்க வைக்கிறது. வைத்தபின், துகிலின் வைத்த மாமணிக்கு அரசை வாங்கிக் கைத்தலத்து இனிதின் ஈந்தாள், தாமரைக் கண்கள் ஆர வித்தக காண்டி! என்று கொடுத்தனன் வேத நன்னூல் உய்த்துள்ள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்’ என்று கம்பன் மிக அற்புதமாகக் குறிப்பிடுகிறார்.