பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 145 இராமனுக்கும் சீதைக்கும் கடும் சோதனைகள் ஏற்படுகின்றன. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ, என்று பாற்கடலிலிருந்து பிரிந்து மிதிலையின் கூடி மகிழ்ந்தனர். வனவாசத்தில் அரக்கன் செயலால் மீண்டும் பிரிவு ஏற்படுகிறது. சீதை அசோகவனச் சிறையில் இராமன் கிட்கிந்தையின் அருகில் உள்ள வனத்தில், அனுமனின் அருஞ்செயல் மூலம் இராமனுடைய துதனாகச் சென்று சீதையைக் கண்டு, கணையாழி கொடுத்து அவளிடமிருந்து சூளாமணியைப் பெற்று அம்மணியை இராமனிடம் சேர்க்கிறான். இராமனும் சீதையும் மீண்டும் கணையாழி மூலமும் சூளாமணி மூலமும் உள்ளத்தால் உணர்வால் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். இங்கு இருவரையும் இணைக்கும் கம்பனுடைய அருமையான பாடல்கள் திரும்ப திரும்பப் படிக்கத் தக்கவை, நினைவு கூறத்தக்கவை. கணையாழியைக் கண்ட சீதைக்குப் போன உயிர் வந்தது போன்ற உணர்வு பொங்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதைக் கையில் வாங்கினள், மார்பிடை வைத்தனள், சிரத்தால் தாங்கினள், மலர்க் கண் மிசை ஒத்தினள், தடந்தோள் வீங்கினள், மெலிந்தனள், குளிர்ந்தனள், வெதுப்போடு ஏங்கினள், உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமோ என்று கம்பர் குறிப்பிடுகிறார். இன்னும் கணையாழியைக் கண்ட சீதையின் நிலைமை பற்றிக் கம்பன் கூறுகிறார். அதை மீண்டும் நினைவு கூர்வோம். "இறந்தவர் பிறந்த பயன் எய்தினர் கொல் என்கோ? மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர் கொல் என்கோ? துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது கொல் என்கோ? திறம் தெரிவது என்னை கொல்இ நன்னுதலி செய்கை’’ என்றும், 'இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் பழந்தனம் இழந்தன படைத்த வரை ஒத்தாள் குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள், உழந்து விழி பெற்றது ஒர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்’’