பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 147 படைகள் செல்லும் போது ஊர்கள், நாடு நகரங்கள் வழியில் செல்ல வேண்டாம். அதனால் அம்மக்களுக்குக் கலக்கமும் கஷ்டங்களும் ஏற்பட்டு விடும். எனவே சாதாரண மக்களுக்கு எவ்விதத் தொல்லையும் இல்லாமல் மலைகள், குன்றுகள், ஆறுகள் அதன் ஒரங்கள் வழியே செல்லுமாறு இராமன் குறிப்பிடுகிறான். 'வையகம் அதனில் மாக்கள், மயங்குவர், வயவெம்சேனை எய்திடின்; என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவப் பெய்கனி, கிழங்கு, தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த செய்யமால் வரையே, ஆறாச் சென்றது, அத்தகைப்பு இல் சேனை’’ இவ்வாறு அனுமனும் அங்கதனும் நீலனும் வழி காட்ட வானரப்படை பன்னிரண்டு நாட்கள் நடந்து சென்று தென் திசைக் கடலை அடைந்தனர். 20. இராவணன் சபையில் கும்பகருணனும் விடணனும் எரியுண்ட இலங்கையைப் பழுது பார்த்துப் புதுப்பித்து முன்னைக் காட்டிலும் அழகு ர அமைத்தனர். இராவணன் மந்திராலோசனைக்காகத் தன் நெருக்கமானவர்களைக் கொண்ட சபையைக் கூட்டினான். சபையில் இராவணன் கொலு வீற்றிருந்தான். இங்கு இராவணனைக் குறிப்பிடும் போது, அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்’ என்றும், புனைகுழல் மகளிரோடு இளைஞர் போக்கினான், நினைவுறு காரியம் நிகழ்த்து நெஞ்சினான்’ என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். இராவணனுடைய மந்திராலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில் கும்பகருணன் முதலில் பேசுகிறான். அவன் தன் அண்ணனுடைய செய்கைகளை இடித்துக் காட்டி அறிவுரை கூறுகிறான் நீ அயன் குலத்திற்கு ஒரு தலைவனாக இருக்கிறாய். ஆயிரம் வேதப் பொருள்களை அறிந்துப் பெரும் அறிவு பெற்றுள்ளாய் ஆயினும் உனது ஊழ் வினையால் தீயனவற்றைச் செய்து நிற்கிறாய்.