பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I கம்பநாடன் காவியத்தில் 152 ==> காதலும் பெருங்காதலும் கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண் உற்றான்' என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். சீதை நீங்காத துயரத்தில் இருந்தாள். இராமன் தனிமையாக இருந்து சீதையை நினைந்து கண்ணிர் பொங்கி நின்றான். அது போல கடலும் பொங்கி எழுந்து அதன் அலைகள் வந்து இராமனுடைய தாள்களில் வந்து வீழ்ந்தன. “இந்து அன்னநுதல் பேதை இருந்தாள், நீங்கா இடர்; கொடியேன் தந்த பாவை, தவப் பாவை தனிமைதகவோ எனத்தளர்ந்து சிந்துகின்ற நறும் தரளக் கண்ணிர் ததும்பித்திரைத்து எழுந்து வந்து வள்ளல் மலர்த்தாளில் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே” என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். இராமபிரான் விசாலமான பெரிய கடலைக் கண்டான். அதை விட விரிவானதாக அவனுடைய நெடு மானமும் துயரமும் சீதைபாலான காதலும் குமுரி நின்றது. இந்த நிலையில் அடுத்து என்னதாகும், எவ்வாறு தனது அடுத்த பணிகளைக் கொண்டு செல்லலாம் என்பதையும் சிந்தித்தான். 'இன்னதாய கருங்கடலை எய்தி, இதனுக்கு எழுமடங்கு தன்னது ஆய நெடுமானம் துயரம், காதல், இவைதழைப்ப, என்னதாகும் மேல்வினை என்று இருந்தான் இராமன், இகல் இலங்கைப் பின்னதாய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவோம்” என்று கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு சீதையின் நீங்காத துன்பங்களை நினைந்து மிக்க துயரம் அடைந்த இராமன் கடல், அதன் அலைகள், அதன் குமுறல் ஆகியவைகளைக் கண்டும் கேட்டும் தானும் குமுறுவதைக் கம்பன்