பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

__ கம்பநாடன் காவியத்தில் 158 2)=> காதலும் பெருங்காதலும் ஆதலால் சீதையை விட்டு விடுக, என்று கூறினான் முதியவன். இராவணன் மாலியவானைக் கடுமையாகக் கடிந்து கொண்டான். அவனும் பேச்சை விட்டான். 23. தேவியை விடுக அன்றேல் ஆவியைவிடுக இராவணன் பெரும் படையுடன் கோட்டையின் வடக்கு வாசலில் நின்றான். இராமனும் பதினேழு வெள்ளம் சேனை பலத்துடன் வடக்கு வாசல் பக்கம் இராவணனை எதிர்பார்த்து நின்றான். அப்போது இராமன் வீடணனிடம் 'துரதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் துண்டி, மோதினை விடுதியோ என்று உணர்த்தவே, மறுக்கும் ஆயின் காதுதல் கடன்; என்று உள்ளம் கருதியது, அறனும் அ ஃதே; நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான்' ஒரு துதுவனை அனுப்பி மோதலை விடுதியே என்று உணர்த்திப் பார்க்கலாம் மறுக்குமாயின் அப்போது போர் செய்வதைக் தவிர வேறு வழியில்லை, அது தான் அறமும் நீதியும் என்ற கருதுகிறேன், என்று கேட்டான். 'அரக்கர் கோன் அதனைக் கேட்டான் ‘அழகிற்றே ஆகும்’ என்றான்; குரங்கினத்து இறைவன் கேட்டுக் "கொற்றவற்கு உற்றது என்றான் "இரக்கம் அது இழுக்கம்’ என்றான் இளையவன்; இனி நாம் அம்பு தூக்குவது அல்லால், வேறு ஒர் சொல் உண்டோ’’ எனச் சொன்னான்” மேலும் இராமனுடைய கருத்தை மறுத்து இலக்குவன் பல வாதங்களையும் கிளப்பினான். இலக்குவன் கிளப்பிய வாதங்களையெல்லாம் கேட்டு இராமனும் புன்முறுவல் பூத்து “நீ கூறிய வாதங்களை நான் மறுக்கவில்லை. முடிவும் அதுதான் ஆகும். இருப்பினும் அறிஞர்கள் ஆய்வு செய்து