பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் XY 11 அவனை அமைதிப்படுத்தினான். 'செம்மையின் ஆணி’ என்று இன்னும் சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை’ என்று பரதனைப் பற்றி இராமன் குறிப்பிடுகிறார். இதைக் காட்டிலும் சிறந்த சொற்களைக் கொண்டு அந்த உயர் குணத்துப் பரதனைப் பற்றி வேறு எந்தக் கவிஞன் குறிப்பிட முடியும்? கம்பநாடனைத் தவிர வேறு எந்தக் கவிஞனும் இத்தனை சிறப்பாகப் பேசவில்லை. பரதனையே ஆட்சிப் பொருப்பை ஏற்று நடத்தும்படி இராமன் கூறினான். அதற்கு பதிலளித்த பரதன், “நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ?’’ என்று அரசியல் நெறி பற்றி மிகவும் சிறப்பான கருத்துக்களைக் கொண்ட வாசகத்தைக் கூறுகிறான். சூர்ப்பனகையின் வருகையைப் பற்றிக் கம்பன் கூறும் போது. 'பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி; அம்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள்' என்று குறிப்பிடுகிறார். இங்கு மெல்லின எழுத்துக்கள் நிறைந்த சொற்கள் மூலம் சூர்ப்பனகையின் வஞ்சகச் செயலைக் கம்பன் எடுத்துக் காட்டுவது சிறப்பாகும். இராமனும் இலக்குவனும் சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு சென்றனர். வழியில் குற்றுயிராகக் கிடந்த சடாயுவைக் கண்டு விவர மறிந்தனர். இராமன் சீதைக்கு ஏற்பட்டக் கதியைக் கண்டு மிகவும் வருந்தினான். அதைக் கண்ட சடாயு வருந்திப் பயன் இல்லை “ஆதலால் முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கித், தேவர்தம் கருத்து முற்றி, வேத நூல் முறையின் யாவும்விதியுளி நிறுவி, வேறும் தீதுள துடைத்தி; என்றான், சேவடிக் கமலம் சேர்வான்” என்று கூறி இராமனுடைய அவதாரக் கடமையை நினைவூட்டுகிறான்.