பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TV- கம்பநாடன் காவியத்தில் 178 > z= காதலும் பெருங்காதலும் சென்று அவளுக்கு முன்பாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். சீதையிடம் கெஞ்சுகிறான். தன் விருப்பத்திற்கு இணங்குமாறு வேண்டுகிறான். 'வஞ்சனேன், எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட நஞ்சுநோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த நெஞ்சு நேர் ஆனது; உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம்! அமுதின் வந்தீர்” “ஈசனே முதலா மற்றைமானுடர் இறுதியாகக் கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீரக்கோட்டி பேசுவார் ஒருவற்கு ஆவி தோற்றிலேன்; பெண் பால்வைத்த ஆசைநோய் கொன்றது என்னா ஆண்மைதான் மாசுனாதோ?” என்றெல்லாம் கூறி இராவணன் சீதையிடம் கெஞ்சுகிறான். நான் எக்காரியத்திலும் வெற்றியே பெற்று வருபவன். பெரு வீரர் வரிசையில் வைத்துப் பேசப்படுபவன். இது வரை நான் எதிலும் தோற்றேன் இல்லேன். பெண்பால் வைத்த ஆசை நோய் என்னைக் கொன்றுவிட்டது என்று ஆகிவிடுமானால் அது என் ஆண்மைக்கு மாசு ஏற்படுத்திவிடாதா? “பெண்பால் வைத்த ஆசை நோய் கொன்றது என்னா, ஆண்மை தான் மாசுனாதோ?’ என்று இராவணன் சீதையிடம் கெஞ்சிக் கெஞ்சி வேண்டுகிறான். இன்னும் 'அறம் தரு செல்வம் அன்னிர்! அமுதினும் இனியீர்! என்னைப் பிறந்திலன் ஆக்கவந்தீர்! பேர்எழில் மானம் கொல்ல மறந்தன. பெரிய, போன வரும்; எனும் ஆசை தன்னால் இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார்?” "அந்தரம் உணரின் மேல் நாள், அகலிகை என்பாள், காதல் இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ? மந்திரம் இல்லை வேறோர் மருந்தில்லை மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால், அமுதச் சொல்லீர்!’ என்றெல்லாம் கூறி தனது இச்சையை வெளிப்படுத்திக் கனிவுடன் வேண்டுகிறாள்.