பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-sl H - | || || || || ШТ 185 'மண் மேல் வைத்த காதலின், மாதர் முதலோர்க்கும் புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் பெண் மேல் வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்; ாண்மேல் வைத்த என்புகழ் நன்றால் எளியனோ?” என்று புலம்பினான். / சீதை மீது அளவுக்கு மீறி வைத்த காதலின் காரணமாக இந்த விளைவுகள் எல்லாம் ஏற்பட்டு விட்டன என்று புலம்புகிறான். போர்க் காத்தில் கிடந்த இலக்குவனையும், சுக்கிரீவனையும் மாருதியையும் கண்டு இராமனும் சோர்ந்து விழுந்தான். இந்திர சித்தன் வெற்றிக் களிப்புடன் இலங்கை சென்று இன்று இலக்குவனை வீழ்த்திவிட்டேன். இராமன் ஒடி விட்டான் நாளை அவனையும் வென்று மீள்கிறேன் என்று தந்தையிடம் கூறினான். இராவணன் மகிழ்ச்சியடைந்து மருத்தனை அழைத்தான். போர்க் களத்தில் கிடந்த அரக்கர் பிணங்களையெல்லாம் அப்புறப்படுத்திக் கடலில் தள்ளி விட்டுச் சீதையை விமானத்தில் வற்றிக் கொண்டு போய்ப் போர்க்களத்தைக் காட்டும்படி பணித்தான். அவனும் அவ்வாறே செய்தான். போர்க்களத்தில் இலக்குவனும் மற்றவர்களும் வீழந்து கிடப்பதை விமானத்திலிருந்துக் கண்ட சீதை கோ என அழுதாள். 'கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஒய்ந்தாள்; தண் தாமரைப்பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள்; பெண்தான் உற்ற பெரும்பிழை உலகுக்கெல்லாம் பெரிதன்றோ?' என்று கம்பநடர் குறிப்பிடுகிறார். இவ்வாறு மங்கை அழுத போது உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழுதன. மயில்கள் அழுதன, குயில்கள் அழுதன, பதுமத்திருந்த மாது அழுதாள், கங்கை அழுதாள், நாமடந்தை அழுதாள், கமலத்தடங் கண்ணன் தங்கை (துர்கை) அழுதாள். இரங்காத அரக்கி மாறும் தளர்ந்து அழுதனர்.