பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் XX1 அகத்தியனைப் பற்றிப் பல இடங்களிலும் குறிப்பிடும் போது, தமிழ்த் தலைவன் என்று கூறுகிறார், நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ என்றும், தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்' என்றும், “என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்' என்று கூறுகிறார். பம்பைக் கரையில் இருக்கும் போது இராமன் சீதையை நினைத்துப் புலம்பும் போது, பலதும் கூறுவதுடன் தமிழ்பாட்டு இசைக்கும் தாமரையே என்றும் கூறுவதாகக் கம்பன் குறிப்பிடுகிறார். இவ்வாறு இன்னும் பல இடங்களிலும் தனது காவியத்தில் தமிழின் சிறப்பைப் பற்றிக் கூறும் கம்பன் சீதையைத் தேடுவதற்காகச் கக்கிரீவன் வழி கூறும் போது தமிழின் சிறப்பு பற்றி அதன் உச்சத்திற்கே கொண்டு செல்கிறான். அருந்ததி மலை, திருவேங்கட மலை தொண்டை மண்டலம், பொன்னி என்னும் தெய்வத்திரு நதியின் இரு கரைகள் மற்றும் சோழ நாடு கடந்து தமிழ் நாட்டில் பெயர்க மாதோ’ என்று குறிப்பிடுகிறார். இங்கு பாண்டிய நாட்டையே தமிழ் நாடு என்று கம்பர் குறிப்பிடுகிறார் போலும், அங்கு சென்றபின் 'தென்தமிழ்நாட்டு அகன் பொதியில்; திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பிரேல், என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகிப் பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையெனும் திருநதி பின் பொழிய, நாகக் கன்று வளர் தடம் சாரல் மயேந்திரமா நெடுவரையும் கடலும் காண்டிர்’ என்று சுக்கிரீவன் குறிப்பிடுகிறார். இங்கு தமிழின் பெருமையைக் கம்பர் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறார். பொதிகை மலையில் திரு முனிவன் தமிழ் சங்கம் வைத்து தமிழ் கற்பித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கு நீங்கள் சென்றால் அகத்தியன் கூறும் தமிழின் இனிமையைக் கேட்டு நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவீர்கள். சீதையைத் தேடுவதை மறந்து விடுவீர்கள். எனவே அந்த மலையை நோக்கி ஒரு கும்பிடு