பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 244 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் இராவணனுடைய தாய் வழிப் பாட்டன் முதியவன் மாலியவான் தொடர்ச்சியாக இராவணனுடைய செயலைக் கண்டித்துக் கடைசி வரை தன்னைத் திருத்திக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டேயிருந்தான். இராமன் அனுமனையும் அங்கதனையும் தூது அனுப்பி இராவணனிடம் சீதையை விடும்படி கேட்கிறான். தேவியை விடுக இல்லையேல் ஆவியை விடுக என்று கூறிப் பார்த்தான். இது ஒரு அரசியல் முயற்சியாகும். அதிகாயன் போர்க்களத்தில் மாண்ட போது அவனுடைய தாய் தானமாலையும் தனது அழுகை மூலம் இராவணனுடைய செயலைக் கண்டிக்கிறாள். கடைசியாக மாவீரன் இந்திரசித்தன் வானரப் படைகளை எதிர்த்து இரு முறை வெற்றி பெற்றவன், போரில் வல்லவன் பல வெற்றிகளைக் கண்டவன் நிகும்பலை யாகத்தை நடத்த முடியாமல் திரும்பி ஓடிவந்து இனி வெற்றி வாய்ப்பு இல்லை என்று கருதித் தன் தந்தையிடம் "குலம் செய்த பாவத்தாலே கொடும் பழி தேடிக் கொண்டாய் ஆசை தான் அச் சீதைபால் விடுவையாயின் அனையவர் அச் சீற்றம் தீர்வர் போதலும் புரிவர், செய்த தீமையும் பொறுப்பர்’ என்று தன் அனுபவத்தில் எழுந்த கருத்தைக் கூறி விட்டான். இவை எதற்கும் இராவணன் அசையவில்லை. எந்த அறிவுரையும் அவன் காதில் ஏறவில்லை. அவன் தன் நிலையிலிருந்து மாறவில்லை. என்னை நம்பியே இந்நெடும் பழி தேடிக் கொண்டேன். வேதங்கள் உள்ளளவும் இவ்வுலகம் உள்ளளவும் இராமன் பேர் இருக்குமாயின் என் பேரும் இருக்குமன்றோ, நான் என் தனியாண்மை பெயரேன்” என்று இறுதியாக உறுதியாகக் கூறிவிட்டான். இத்தகைய தனி ஆண்மையும் அதன் முடிவும் இராமாயண மகாகாவியத்தின் உச்சமாகும். கம்ப நாடரின் இந்தக் காட்சிகள் நாம் மீண்டும் மீண்டும் படித்து உணரத்தக்கன.