பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 271 வசையும் கீழ்மையும் மீக் கொளக் கிளையும் மடியாது அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு அருளுதி! அதன் மேல் விசையும் இல்; எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்” என்று கம்பநாடன் குறிப்பிடுகிறார். எத்தனை அறிவுரைகளை எடுத்துக் கூறியும் இராவணன் கேட்கவில்லை. மாறாக வீடணன் மீது கடுங்கோபம் கொண்டு போ, வெளியே என்று விரட்டி விட்டான். வீடணன் இராமனிடம் சரணடைய வந்து விட்டான். அப்போது அவனைப் பற்றி இராமன் தனது நண்பர்களிடம் கருத்துக் கேட்டான். அப்போது மயிந்தன் என்பவன் வீடணனைப் பற்றி 'கற்புடைத் தேவியை விடாது காத்தியேல் எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழைநின் பொற்புடை முடித்தலை புரளும்; என்று ஒரு நற்பொருள் உணர்த்தினன்' என்றும் நாட்டினான்” என்று தனது கருத்தைக் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். கும்பகருணன் களம் சென்றபோது முதல் நாள் போரில் இராவணன் தோல்வியடைந்து வெறுங் கையோடு இலங்கை புகுந்தான். அடுத்த நாள் போர்க்களத்திற்குச் செல்வதற்கு கும்பகருணனைத் தயார் செய்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த கும்பகருணனை எழுப்பினார்கள். போருக்குச் செல்வதற்காக அவனை அலங்கரித்தனர். தன்னை அலங்கரிக்கக் காரணம் என்ன என்று அவன் கேட்டான். வானரரும் மனிதர்களும் நெருங்கி வந்து விட்டனர். கோட்டையைச் சூழ்ந்துள்ளனர். நீ போருக்குச் செல்ல வேண்டும் என்று இராவணன் கூறினான். அப்போது கும்பகருணன், 'ஆனதோ வெம்சமம்? அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?” என்றும்,