பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 2)=> காதலும் பெருங்காதலும் xxviii “சூழ்வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்கச் சுற்றி வேள்வியை சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி, ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த் தொழில் தொடங்கி ஆர்க்கும் தாழ்விலாப் படைகள் மூன்றும் தொடுத்தனன் தடுத்துவிட்டான்” "நிலம் செய்து விசும்பும் செய்து நெடியமால் படை, நின்றானை வலம் செய்து போவதானால் மற்றினி வலியது உண்டோ? குலம் செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக் கொண்டாய்; சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே.” “முட்டிய செருவில் முன்னம், முதலவன் படையை என் மேல் விட்டிலன் உலகை அஞ்சி! ஆதலால் வென்று மீண்டேன்; கிட்டிய போதும் காத்தான்! இன்னமும் கிளர வல்லால்; சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்” ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை; ஆசைதான் அச் சீதைபால் விடுவையாயின் அனையவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல் காதலால் உரைத்தேன்; என்றான்; உலகெலாம் கலக்கி வென்றான்” இராவணன் அதைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டு “முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர்ப் பெயர்வர் என்றும் உன்னை 'நீ அவரை வென்று தருதி என்று உணர்தும் அன்றால், என்னையே நோக்கி யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்' என்றும். 'வென்றிலேன் என்ற போதும், வேதம் உள்ளளவும் யானும் நின்றுளேன் அன்றோ, மற்ற இராமன் பேர் நிற்கும் ஆயின்; பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்து அன்றோ? இன்றுளார் நாளை மாள்வார், புகழுக்கும் இறுதி உண்டோ?’’ என்று வெகுண்டெழுந்தான். இராவணன் கடைசி வரை தனது தனியாண்மை பெயராது நின்றான். அக்கன் இறந்தான், அதி காயன் மாண்டான்,