பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சினிவாசன் xxxiіі மேலும் இராமாயணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நாம் படிக்கும் போது நமக்கு அலுப்புத்தட்டுவதில்லை என்பது எனது கருத்து. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இராமாயணக் கதையும் அதன் உயிரோட்டமான தெய்வீகப் பாத்திரங்களும் அக்கதை நிகழ்ச்சிகளும் நமது வாழ்க்கையில் பதிந்தவை. பக்தியுடனும் இலக்கியச் சுவையுடனும் கதைப்பிடிப்புடனும் நமது மக்கள் இராமாயணத்தைப் படித்து வருகிறார்கள். சில இடங்களில் சில கருத்துக்களைக் குறிப்பிடும் போது விரிவான சில எடுத்துக் காட்டுகளுடன் சொல்ல வேண்டியதிருக்கிறது. தசரதனுடைய பெண்ணாட்டம் பெண்கள்பால் வைத்த நேயம் பற்றி அயோத்தி மக்கள் கூறுகிறார்கள். இலக்குவன் கூறுகிறான். சடாயு கூறுகிறான். இவ்வாறு அவைகளை எடுத்துக் காட்ட வேண்டியதிருக்கிறது. இராமன் சீதை மீதான காதல் மிகுதி காரணமாக மாயமான் பின்னால் சென்றது பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகளைக் காட்டியும் சடாயு பேசுகிறான். அந்நிகழ்ச்சியை நினைத்து இராமன் பல நேரங்களிலும் வருந்துகிறான். சீதையும் அந்த நிகழ்ச்சிகளை நினைந்து தன்னை நொந்து கொள்கிறாள். அதைக் கம்பனுடைய கவிதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்ட வேண்டியதிருக்கிறது. சீதையின் கற்பின் சிறப்புகள் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். குறிப்பாக அனுமன் தன்னை மறந்தும் பெருமகிழ்ச்சி கொண்டும் சீதையின் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறான். மற்றும் வீடணனும் பிரம்மாவும், சிவபெருமானும் தசரதனும் பேசுகிறார்கள். அவர்களுடைய சொந்த அருமை பெருமைகள் ஆற்றல் அதை மற்றவர்கள் எடுத்துக் காட்டும் போது உணர்கிறார்கள். சிலர் நீண்ட உறக்கத்தில் அல்லது அமைதியில் இருப்பார்கள். அதுபோல் அனுமனுடைய ஆற்றல் அனுமனுக்குத் தெரியாது. அவன் மிகவும் அடக்கமானவன் கிட்கிந்தையில் நடக்கும் பல பாமர நிகழ்ச்சிகள் எல்லாம் அவனுக்குப்பிடிக்காது. ஒதுங்கியே இருப்பான். புலனடக்கம் கொண்டவன். அளவுக்கடந்த ஆற்றலும் பலமும் அறிவும் மிக்கவன். இராமாயணப் பெரும் காவியத்தில் அனுமனுடைய பங்கு மகத்தானது. அதனால் தான் பரத கண்டத்து மக்கள் அனுமனுக்கு தனிச் சன்னதிகளும் தனிக் கோயில்களும் கட்டிப் பாராட்டுகிறார்கள், வழிபடுகிறார்கள். அனுமனைப் பாராட்டி இராமாயணப் பெருங்காவியத்தில் இராமன். இலக்குவன், வாலி, வீடணன், சாம்பவன் மற்றும் பலரும்