பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 8 تحلإصلإح காதலும் பெருங்காதலும் வந்து நிற்கிறான். ருக்மணி அத்தேரில் ஏறுகிறாள். குதிரைகளின் லகான்களை ருக்மணியின் கைகளில் கொடுத்துக் கண்ணன் அவளை தேரை ஓட்டச் சொல்கிறான். இதில் ஒரு மிக முக்கியமான நுட்பமான கருத்து அமைந்திருக்கிறது. ருக்மணி தன்விருப்பப்படி உடன்பட்டு தானே தேரை ஒட்டிக் கொண்டு கிருஷ்ணனுடன் செல்கிறாள். இதை யார் தடுக்க முடியும்? பொருந்திய மகளிரோடு ஆண் பெண் உறவு முறையில் பெண்மைக்கு முதலிடமும் முக்கிய இடமும் கொடுப்பது என்னும் நெறிமுறை நமது சாத்திரங்களில் வலியுறுத்தப்படுகின்றன. இதை மிக அழகாகக் கோசல நாட்டில் நிலவியிருந்த நெறிமுறைகளைப் பற்றி மாண்புகளைப் பற்றிக் கவிஞர் குறிப்பிடுகிறார். "பொருந்திய மகளி ரோடு வதுவவையில் பொருந்து வாரும், பருந்தொடு நிழல்சென்று அன்ன இயல் இசைப்பயன் துய்ப்பாரும் மருந்தினும் இனிய கேள்வி செவி உறமாந்து வாரும் விருந்தினர் முகங் கண்டு அன்னவிழா அணிவிரும்பு வாகும்' பொருந்திய மகளிர் என்பது ஆட்பொருத்தம், சாதகப் பொருத்தம், பெயர்ப் பொருத்தம், இரு குடும்பத்தார் இசைவு மட்டுமல்ல, மனப் பொருத்தமும் இருமன இசைவும் முதலிடம் பெறுகிறது. கல்வியும் செல்வமும் கோசல நாட்டின் பெண்கள் செல்வமும் கல்வியும் நிரம்பியவர்களாக இருந்தனர். அவர்களிடம் செல்வமும் கல்வியும் நிரம்பிப் பூத்து மலர்ந்திருந்தது எனக் கம்பன் குறிப்பிடுகிறார். 'பெரும் தடங்கண் பிறை நுதலார்க் கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்திவந்தவர்க்கு ஈதலும், வைகலும் விருந்தும் அன்றி வினைவன யாவையே” என்று மாதர்களின் சிறப்புப் பற்றிக் கூறுகிறார். மாதர் கற்பின் நின்றன கோசல நாட்டின் மக்கள் நல்ல பண்புகளால் பொலிவுடன் விளங்கினார்கள். அந்த நாட்டின் நீதி பொய்யில்லாத நிலையில் உறுதியாக நின்றது. மாதர்களுடைய அன்பினால் அந்த நாட்டின்