பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 10 2)=> காதலும் பெருங்காதலும் இவ்வாறு அயோத்தியின் கோட்டை மதில் சுவரின் உயர்வுக்கு முடிவிலாத அறிவின் சிறப்புமிக்க வேதம், விண்ணின் உயர்வு, ஐம்பொறிகளின் அடக்கிய முனிவரின் தவம், காவலில் உயர்ந்த துர்க்கை, சூலத்தின் சக்தியில் உயர்ந்த காளியாரும் எளிதாக அடைய முடியாத தன்மையான ஈசன் ஆகியவை உவமைகளாகக் கூறப்பட்டிருக்கின்றன. இத்தகைய உயர்ந்த மதிலுக்கு சக்கரவாள மலையை அலை வீசும் கடல் சூழ்ந்திருப்பதைப் போன்ற அகழி, மிக ஆழமான அகழி சூழ்திருந்தது என்று கம்பர் குறிப்பிடுகிறார். அந்த அகழியின் ஆழம் பொன்விலை மகளிரின் உள்ளம் போல கீழே போய்க் கொண்டிருந்தது, புன்கவி எனத் தெளிவின்றி இருந்தது” என்றும் பல உவமைகளைக் கூறி அகழியின் ஆழத்தைக் கவிஞர் குறிப்பிடுகிறார். தசரத மன்னரைப் பற்றியும் அவருடைய சிறப்பான நேர்மையான ஆட்சியைப் பற்றியும் குறிப்பிடும் போது, ஆற்றுப்படலத்தில் “வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர் உள்ளமும் ஒருவழி ஒட நின்றவன்’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். வெள்ளத்தின் நீரோட்டம் ஒரே நேரில் செல்லாது. திசை மாறியும் நெளிந்து நெளிந்து செல்லும். பறவையும் பறக்கும் போது திசை மாறியும் வளைந்தும் நெளிந்தும் பறந்து செல்லும். விலங்கின் செயல்களும் ஒரு நிலையில் இருக்காது. போனபோக்கில் இருக்கும். அது போல வேசையர் உள்ளமும் கூட ஒருவழியில் செல்லும் படியாக அந்த மாமன்னனின் ஆட்சி முறை அமைந்திருந்தது என்று கம்பர் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். தசரதன் ஆட்சியில் பெண்களின் ஒழுக்க நெறி தவறாமல் சென்றது என்னும் கருத்து இலை மறைவுகாயாகக் கோடிட்டுக் காட்டப்படுவதைக் காண்கிறோம். அவை பொருள் பொதிந்து காணப்படுகின்றன. தாடகை வதைப் படலத்தில் பாலைவனக் காட்சியைக் கம்பர் விவரித்துக் கூறுகிறார். 'தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும் மூவகைப் பகை அரண்கடந்து, முத்தியில் போவது புரிபவர் மனமும், பொன்விலைப் பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே!' என்று குறிப்பிடுகிறார்.