பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 'வெள்ள நீர் உலகினில், விண்ணில், நாகரில் தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான் கள்ளரின் கரந்துறை காமம் ஆதியாம் உள்உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழவெனோ? 29 என்று கூறுவதைக் கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். மங்கையரால் வரும் காமம் இல்லையெனில் இராமனுக்கு முடி சூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. நல்ல நாள் குறிக்கப்பட்டது. பின்னர் தசரதன் வசிட்டனை அழைத்து விழாவிற்கு ஆவன செய்யும்படியும் இராமனுக்கு நல்லுரைகள் வழங்கும் படியும் கூறினார். வசிட்டன் இராமனிடம் ஒரு அரசனுக்குரிய கடமைகளைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அக்கருத்துக்கள் மிகவும் உயர்ந்த அரசியல் நெறி மிகுந்த எக்காலத்துக்குமுரிய சிறப்பான கருத்துக்களாகும். ஒரு நாட்டிற்கு அரசனாக இருப்பவன் அண்டை நாடுகளுடன் பகை கொள்ளலாகாது. அப்போது போர் ஒடுங்கிவிடும். அந்த நாடு களுடன் நட்புறவு அதிகமாகும். அதன் காரணமாக அந்த மன்னனின் புகழ் ஓங்கும். பாதுகாப்பிற்குரிய அவனுடைய சேனையின் பலம் குறையாது. அத்தகைய நன்மைகள் உண்டாகும் போது அந்த நாட்டிற்கும் அந்த நாட்டின் அரசனுக்கும் எவ்விதக் கேடும் ஏற்படாது. ஐம்புலனறிவுகளையும் கொண்டிருக்கின்ற ஜம்பொறிகளின் தீமைகள் குறையும்படி சிறந்த பொருள்களை நாள்தோறும் பெருகச் செய்து நடுநிலை கொண்டு உறுதியுடன் ஆளும் அரசே அரசாகும். நாட்டின் அறிவை வளர்த்துச் செல்வத்தைப் பெருக்கி, அவைகள் அனைவருக்கும் பயன்படும் முறையில் நடுநிலையில் நின்று வலிமையுடன் உறுதியுடன் ஆளும் அரசே நல்லரசாகும். அவ்வாறான நல்லாட்சி என்பது வாளின் மேல் நின்றுத் தவம் செய்தவற்கு ஒப்பாகும். திரிமூர்த்திகளுக்கும் ஒப்பான பலமும் ஆற்றலும் அறிவும் கொண்டிருந்தாலும் ஒரு அரசன் சிறந்த அமைச்சர்களைக் கொண்டு, அவர்களுடைய நல்ல ஆலோசனைகளைக் கேட்டு அவர்களின் சொல்வழியில் செயலாற்றுவதே சிறந்த ஆற்றலாகும். நாட்டு மக்களையும் மற்றோர்களையும் அடக்கி ஒடுக்கி ஆள்வதற்கு பதிலாக அன்பினால் அரவணைத்துக் கொண்டு ஆட்சி செய்வது தான் சிறந்த ஆட்சி முறையாகும்.