பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 34 உயிர் பிரிந்து விடும் என்னும் நிலையிலும் கைகேயி என்னும் பெண் தனது நிலையை விட்டுக் கொடுக்கவில்லை. அவளுடைய சினம் தணியவில்லை. 'மரந்தான் என்னும் நெஞ்சினள், நானாள், வசை பாராள் என்று கவிஞன் குறிப்பிடுகிறார். இனி வேறு வழியில்லை. தசரதன் அழுது புலம்பிப் பேசுகிறான். 'ஏவம் பாராய்! இல்முறை நோக்காய்! அறம் எண்ணாய்! ஆ என்பாயோ! அல்லை மனத்தால் அருள் கொன்றாய்! நா அம்பால் என் ஆருயிர் உண்டாய்! இனிஞானம் பாவம் பாராது இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்' கைகேயியிடம் பெண்ணே நீ உன் குற்றத்தை எண்ண மறுக்கிறாய். நீ நற்குடியில் பிறந்தவள். உன் இல் முறையை அதன் பெருமையை நினைக்க மறுக்கிறாய். அறத்தை எண்ண மறுக்கிறாய். கொடிய மனத்தால் அருள் கொன்றாய். உனது சொல் அம்புகளால் என்னைக் கொல்கிறாய். இனி இந்த உலகம் நீ என்னைக் கொன்றதாகப் பழி சுமத்தும் நற்குடியில் பிறந்த பெண்ணின் நெறிமுறையை இழந்து விட்டாய் என்றெல்லாம் தசரதன் கூறுகிறான். இன்னும் என் மனை வாழும் பெண்ணால் எனக்கு ஆயுள் முடிவு ஏற்பட்டு விட்டது” என்று கூறுகிறான். 'மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து எண்ணா நின்றார் யாரையும் எல்லா இகலாலும், விண்ணோர் காறும் வென்ற எனக்கு, என்மனை வாழும், பெண்ணால் வந்தது அந்தரம், என்னப் பெறுவேனோ? என்று கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். முடி சூட்டுவதற்கான நல்ல நேரம் வந்துவிட்டது. அரசனை அழைத்து வரும்படி சுமந்திரனிடம் வசிட்டன் கூறினார். சுமந்திரன் அரண்மனைக்குச் சென்றான். அங்கு அரசனைக் காணவில்லை. அங்கிருந்து கைகேயியின் மாளிகைக்குச் சென்றான். பெண்டிரின் கூற்றம் அன்னாள் அங்கிருந்த கைகேயி சுமந்திரனிடம், “இராமனை இங்கு அழைத்து வரவும்” என்று ஆணையிட்டாள். இதைப் பற்றிக் கூறும் போது கம்பன்