பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 36 تدخيصلإحلا காதலும் பெருங்காதலும் இராமன் குழந்தைப் பருவத்திலிருந்து தனது தாய் கோசலையிடம் வளரவில்லை. கைகேயி தான் அவனைப் பேணி வளர்த்தாள். எனவே அவன் இனி நாட்டை ஆளப் போகிறான் என்பதைக் கேட்டுப் பெரு மகிழ்ச்சியடைந்து அவனைத் தன்னிடம் அழைத்திருக்கிறாள். அது இயற்கை தானே என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள், என்று கவிப் பேரரசு குறிப்பிடுகிறார். 'தாய் கையில் வளர்ந்திலன், வளர்த்தது தவத்தால் கேகையன் மடந்தை; கிளர்ஞாலம் இவன்ஆள ஈகையில் உவந்தவள், இயற்கை இது என்றால் தோகை அவள் பேர்உவகை சொல்லல் அரிது! என்பார்’ என்பது கம்பரது பாடல். இராமன் கைகேயி முன்பு போய் நிற்கிறான், “நின்றவன் தன்னை நோக்கி. இரும்பினால் இயன்ற நெஞ்சின் கொன்றுழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள், இன்றெனக்கு உரைத்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்; ஒன்றுனக்கு உந்தை மைந்த உரைப்பது ஒர் உரை உண்டு; என்றாள்' இவ்வாறு முத்தாய்ப்பு வைத்துப் பேசுகிறாள். இராமனோ எந்த விதமான களங்கமும் இல்லாமல் தந்தையும் தாயும் நீரே தலை நின்றேன் பணிமின்’ என்று கூறி விட்டான். அப்போது தான் கைகேயி ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனே ஆள' என்று தொடங்கி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து விட்டு வரும்படி அரசன் ஆணையிட்டுள்ளதாகக் கூறுகிறாள். இராமன் இன்முகத்துடன் “மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ? என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலைமேல் கொண்டேன்; மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன், விடையும் கொண்டேன்” என்று கூறி அப்பொழுதே கானகம் செல்ல விடையும் பெற்றான். இங்கு தசரதன் கைகேயி அயோத்தி மக்கள் இராமன் ஆகியோரது மன நிலைகளையும் கைகேயியின் உறுதிமிக்க நிலைபாட்டையும் கம்பன் மிக அற்புதமாக எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். இராமன் மரஉரி தரித்துக் கொண்டு வனம் செல்லத் தயாராகித் தனது தாயிடம் விடைபெற வருகிறான். அவனுடைய தவக்