பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 38 H ਔਂ= * காதலும் பெருங்காதலும் என்று குறிப்பிட்டு மெய்யின் பக்கம் உள்ள நமது வேந்தனை பொய்யின் பக்க முள்ளவனாக ஆக்கிவிடுவாயா அருங்கற்பினோய் என்று தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்றத் துணையாக இருக்கும்படி தாயைக் கேட்டுக் கொள்கிறான். அத்துடன் இராமன் உறுதியான வார்த்தைகளில், “சிறந்த தம்பி திரு உற, எந்தையை மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன். இதின் பிறந்து யான் பெறும் பேறென்பது யாவதே' என்று தனது தாயிடம் கூறுகிறான். 'அப்படியாயின் நானும் உன்னுடன் காட்டிற்கு வருகிறேன், என்று கோசலை கூறுகிறாள். அப்போது இராமன் ஒரு பெண் தனது கணவன் பக்கம் இருந்து அவனைக் காப்பதே அறம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான். என்னைப் பிரிந்து துன்பக்கடலில் இருந்து வருந்தும் மன்னர் மன்னனுக்கு ஆறுதல் கூறாமல் அன்னையே நீ என்னுடன் வருவதாகக் கூறலாமா? நீ அறத்தைப் பார்க்க வேண்டாமா? உன் கடமைகளைச் செய்ய வேண்டாமா? மன்னர் ஆட்சிப் பொருப்பை மகன் பரதனிடம் ஒப்படைத்து விட்டுத் தவம் மேற்கொள்ளும் போது தாங்கள் அவருக்கு அருகில் இருந்து பணிவிடைகள் செய்ய வேண்டாமா? நான் பதினான்கு ஆண்டுகளை பதினான்கு இரவு பகல்களாக முடித்து வருவேன். தவம் செய்து தேவர்களும் முனிவர்களும் உயர்ந்ததைப் போல மேன்மையடைந்ததைப் போல நானும் மேன்மையடைந்து திரும்புவேன். நான் விசுவாமித்திர முனிவரிடம் கற்ற வித்தைகளையும் பின்னர் அடைந்த கல்வி அறிவுச் செல்வங்களையும் எல்லாம் பயன்படுத்தி தவம் செய்யும் முனிவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்து அவர்களுடைய அருளையும் ஆசியையும் பெற்று இமையோர் அன்பையும் பெற்றுத் திரும்புவேன்’ என்றெல்லாம் பல வாசகங்களையும் தன் தாயிடம் எடுத்துக் கூறி அவளை சமாதானப்படுத்துகிறான். இராமன் எத்தனை சொல்லியும் அமைதியடையாமல் கோசலை 'பரதன் நாட்டை ஆளட்டும் இராமன் வனம் செல்ல வேண்டாம். இதை மன்னனிடம் கூறப்போகிறேன் என்று கூறி மன்னன் இருக்கும் கைகேயியின் அரண்மனைக்குச் செல்கிறாள். அங்கு அவள் கண்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது.