பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 40 < =تحتخ காதலும் பெருங்காதலும் பாவி உன் உண்மையான உள்ளத்தை உணர்ந்து கொண்டேன். நீ முன்பு கனிவாகப் பேசியதெல்லாம் விஷம். அதை நான் நெடு நாள் உண்டு விட்டேன். இப்போது நீ என் உயிரையே உண்டு விட்டாய். நான் உன்னை என் தேவியாகக் கொள்ளவில்லை. ஒரு கூட்டத்தைத் தேடிக் கொண்டேன். எந்தப் பழி பாவத்திற்கும் நீ நாணவில்லை. உன் கழுத்தில் நான் கட்டிய தாலிக் கயிறு உன் மகன் முடிசூட்டிக் கொள்வதற்கக் கட்டிக் கொள்ளும் காப்புக் கயிறாகட்டும்”. இவ்வாறு பலவாறாகக் கூறி இவள் என் தாரம் அல்லள். இவளைத் துறந்தேன். இனி அப்பரதனும் என் மகனில்லை. எனக்கு அவன் இறுதிக் கடனும் செய்ய வேண்டாம். “இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கிச் சொன்னான் இன்றே, இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் மன்னே ஆவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு; என்றான்' என்று தசரதன் கூறியதைக் கம்பன் மிகவும் நுட்பமாக நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். 6. காதல் முதிரக் கருத்தழிந்தான் தசரதன் கைகேயி மீது அளவு கடந்த அன்பும் காதலும் கொண்டிருந்தான். கடைசியில் அவளை நஞ்சு என்றும், கூற்றம் என்றும், அவளைத் தன் மனைவி அல்ல வென்றும், அவளுடைய மகன் பரதன் தன் மகன் இல்லையென்றும் வெறுப்படைந்துக் கூறிவிட்டான். வசிட்டன் அனைவரும் கூடியிருந்த அரசவைக்கு வந்தான், 'பரதற்கு நாடு இராமற்குக் காடு” என்னும் செய்தியைக் கூறினார். பொது மக்கள் விதியை நொந்து அழுது புலம்பினர். இராமன் வனம் செல்கிறான் என்னும் செய்தியைக் கேட்டபோது உலகில் உள்ள உயிர்களெல்லாம் அழுதனவென்று ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுக் கம்பன் கூறுவது காவியச் சிறப்பு மிக்க கவிதை வரிகளாகும். கிள்ளையோடு பூவை (கிளிகளும் நாகண வாய்ப்புட்களும்) அழுத கிளர் மாடத்து உள் உறையும் பூசை பூனை) அழுத ஒரு அறியப் பிள்ளை அழுத ஆவும் அழுத, அதன் கன்று அழுத அன்றலந்த பூவும் அழுத புனல் புள் அழுத, கள்ஒழுகும் காவும் அழுத, களிறு அழுத, கால் வயப்போர்