பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி - அ.சீனிவாசன் 47 இராமனும் சீதையும் கோதாவரிக் கரையில் காணும் கொடிகளிலும் மலர்களிலும் ஒருவருக்கொருவர் மற்றவர் முகங்களைக் கண்டனர் என்று கம்பன் இராமன் சீதையின் அன்பின் காதலின் ஆழத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். 'வில் இயல் தடக்கை வீரன், வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கை தன்மருங்குல் கண்டான் எல்லி அம்குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற அல்லி அம் கமலம் கண்டாள், அண்ணல் தன்வடிவு கண்டாள்' என்று அற்புதமாக இராமன் சீதையின் காதல் உணர்வையும் நினைவையும் எடுத்துக் கூறுகிறார். இனி அடுத்து வரும் காட்சி சூர்ப்பனகை வருகையாகும். அதன் பின்னர் நிகழவிருக்கும் அவலக் காட்சிகளின் முன்னோடியாக சீதை இராமனுடைய நெருக்கமான காதல் சிறப்புகளைக் கம்பன் குறிப்பிடுகிறார் போலும். 8. சூர்ப்பனகை வருகை சூர்ப்பனகை வருகிறாள். சற்றுத் தொலைவிலிருந்து இராமனைக் காண்கிறாள். அவனுடைய அழகைக் கண்டு வியக்கிறாள். அவனிடம் செல்ல விரும்புகிறாள். திருமகள் மந்திரத்தின் மூலம் தனது உருவத்தை அழகிய வடிவில் மாற்றிக் iாகிறாள். அதைக் கம்பன் மென்மையான மெல்லின எழுத்துக்களைக் கொண்ட சொற்களால் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். "பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி; அம்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்’’ என்பது கம்பரது பாடல். இப்பாடல் வரிகளில் அழகும் உட்பொருளும் தமிழின் இனிய சிறப்பும் காணப்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு பார்ப்போர் மனதை ஈர்க்கும்படியாக கவர்ச்சியான முறையில் சூர்ப்பனகைத் தன்னை அழகுபடுத்திக் கொண்டு இராமன் முன் சென்றாள், மேலும் ' கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி, மேனி நன்பெற்று, விளை காமம் நிறை வாசத் தேனின் மொழி உற்று, இனிய செவ்வி நனிபெற்று, ஒர் மானின் விழி பெற்று, மயில் வந்தது என வந்தாள்' எனறும,