பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 50 حجدلإح - காதலும் பெருங்காதலும் 'முனிவரோடு உடையர் முன்னே முதிர்பகை, முறைமை நோக்கார் தனியைநீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த வினையம் ஈதல்லது இல்லை; விண்ணும் நின் ஆட்சியாக்கி இனியராய் அன்னர் வந்துன் ஏவலின் நிற்பர்; என்றாள்' ஆணும் பெண்ணும் காதலில் சிந்தை கலந்து விட்டால் காந்தர்வ மணம் செய்து கொள்ளலாம் என்று வேதங்களே வகுத்துள்ளன. எனவே நாம் இருவரும் இசைந்து விட்டால் எனது மூத்தவர்களுக்கும் விருப்பமேயாகும், அத்துடன் முன்னாள் இருந்த பகையும் நீங்கும். விண்ணும் உன் ஆட்சியின் கீழ்வரும். அவர்களும் வந்து உன் ஏவலில் நிற்பர் என்றும் சூர்ப்பனகை கூறினாள். இதைக் கேட்டதும் இராமனுக்கு சிரிப்பு வந்து விட்டது. உரையாடல் நீடிப்பது உகந்தது அல்ல என்று கருதினான். "நிருதர்தம் அருளும் பெற்றேன்! நின்னலம் பெற்றேன்! நின்னோடு ஒருவரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ! திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயந்தது என்னா வரிசிலை வடித்த தோளான்” வாய் எயிறு இலங்க நக்கான்' என்று கூறிக் கொண்டு வயிறு குலுங்கச் சிரித்தான். அந்த நேரத்தில் சீதை பக்கத்தில் இருந்த பர்னக சாலையிலிருந்து வெளியே வந்தாள். சீதையைக் கண்டவுடன் சூர்ப்பணகைக்குப் பலவித எண்ணங்கள் தோன்றின. சீதையின் அழகைக் கண்டு வியப்படைகிறாள். பெண்ணாகப் பிறந்த எனக்கே இவளுடைய அழகைக் கண்டு மயக்கமேற்படுகிறதே பிறருக்கு என்னவாகும். என்று சிந்திக்கிறாள். 'பண்புற நெடிது நோக்கிப் படைக்குனர் சிறுமை அல்லால் எண்பிறங்கு அழகிற்கு எல்லை இல்லையாம்' என்று நின்றாள்; கண்பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே கண்ட பெண் பிறந்தேனுக்கு, என்றால் என்படும் பிறருக்கு? என்றாள். இராமனையும் சீதையையும் மாறிமாறிப் பார்க்கிறாள். இந்த மூன்று உலகங்களில் உள்ளவர்களுக்கும் அழகின் எல்லையாக இருக்கும் படியாக சீதையும் இராமனும் பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கருதுகிறாள். சீதை இருக்கும் வரை இராமன் தன்னைப் பற்றிச் 'சிந்திக்க மாட்டான் என்று கருதுகிறாள். சீதையை அரக்கி என்று கூறி அவளை விட்டுவிடு என்று இராமனிடம் கூறுகிறாள். சீதை மீது கடுமையான கோபம் கொள்கிறாள். “எங்களுக்கிடையில் ஏன் வந்தாய்’ என்று சீதையைக் கோபத்துடன் கேட்கிறாள்.