பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 5thugosol-u. கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 90 பின்னர் சிவபெருமானே வந்து சீதையை ஏற்றுக் கொள்ளும் படி கூறுவதைக் கம்பன் தனது கவிதைகளில் எடுத்துக் காட்டுகிறார். “என்னும் மாத்திரத்து ஏறு அமர்க் கடவுளும் இசைத்தான் உள்ளன. நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் முன்னை ஆதியாம் மூர்த்தி நீ மூவகை உலகின் அன்னை சீதையாம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள்” என்பது கம்பனது பாடல். சிவனே வந்து இராமபிரானிடத்தில் நீ ஆதியாம் மூர்த்தி என்று கூறுவதாக எடுத்துக் காட்டி ஒரு சமரசத்தைக் கொண்டு வரக் கம்பன் முயன்றிருப்பது அதன் கருத்தெனத் தெரிகிறது. ஆதி கடவுளாகச் சிவபெருமான் இந்திய நாடு முழுவதிலும் போற்றப்படுகிறார். வட பகுதிகளில் பிற்காலத்தில் மகாவிஷ்ணுவே முதல் கடவுளாக முக்கிய இடம் பெற்றிருக்கிறார். மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பெரும்பாலும் வட பகுதிகளில் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக இராமாவதாரமும் கிருஷ்ணவதாரமும் பூரணாவதாரங்கள் என்னும் முறையில் அதன் களங்கள் வடபுலத்திலேயே அமைந்திருக்கிறன. சிவ வழிபாடு வடக்கிலும் தெற்கிலும் இருப்பினும் "தென்னாடுடைய சிவனே போற்றி” என்னும் சொல் மிகவும் சிறப்பாகத் தெற்கே அதிகமாகப் பரவியுள்ளது. சிவனைப் பற்றித் திருவிளையாடல் புராணம், சைவத்திரு முறைகள் பெரிய புராணம் முதலியன மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன. அதேபோல திருமாலின் அவதாரச் சிறப்புகளையும் பெருமைகளையும் வழிபாடுகளையும் பற்றி பாகவதமும் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களும் கூறுகின்றன. இராமாயணமும் மகாபாரதமும் திருமாலின் அவதாரச் சிறப்புகளையும் கடமைகளையும் பற்றி அதிகமாக விவரிக்கின்றன. சிவவழிபாடு இந்திய சமுதாயத்தில் புராதன காலம் தொட்டே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கிறது. சிவலிங்கம் பிறப்புச்