பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sibugib uong.-(pib. 133 குகனை குன்று சூழ்வான் மகனை இலங்கை வேந்தன் வீடணனைத் தனது சகோதரர்களாக அரவணைத்துக் கொண்டதும், அதன் மூலம் இமயம் முதல் இலங்கை வரையிலான பாரத கண்டத்தை ஒற்றுமைப்படுத்தியதும், ஆற்றல் மிக்க சொல்லின் செல்வன் அனுமனைத் துணையாகக் கொண்டதும், அகலிகை முதல் சபரி வரை சாபமுற்றோர் பலருக்கும் சாப விமோசனம் கொடுத்ததும், ஆறுகளை, மலைகளை, காடுகளை, கடலைக் கடந்ததும், தாவரங்களை, பறவைகளை, விலங்குகளை, அரக்கர்களை வென்றதும், இயற்கை சக்திகளை, பஞ்ச பூதங்களைத் தேவர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் தங்கள் ஆற்றலால் பயன்படுத்திக் கொண்டதும், சேதுக்கடலில் அணைகட்டி பாலம் அமைத்ததும், சஞ்சீவி மலை மூலிகைகள் மூலம் மருத்துவத் துறையை உயர்த்தி போர்க்களத்தில் காயமுற்றவர்களை மீட்டதும், இவ்வாறு பல அரிய செயல்களை மானுடர் நிகழ்த்தியது கம்பனது மகாகாவியத்தின் சாரம். “ அதனால், வேறுளகுழுவையெல்லாம் மானுடம் வென்றதன்றே” என்று கம்பன் தனது சீரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. மனிதப் பிறவி அரிய பிறவி. சிறப்பு மிக்க சீரிய பிறவி. மனிதன் தனது அறிவின் ஆற்றலால், உழைப்பின் திறத்தால், விடா முயற்சியான செயல்களால், செயல் திறன் மற்றும் தவ முயற்சிகளின் பலன்களால், தெளிந்த ஞானயோகத்தால் இயற்கை சக்திகளையும் உலகிலுள்ள வேறுபல குழுக்களையும்வென்று, தனது வலுவான செல்வாக்கைச் செலுத்தித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறான்.