பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zuhusi -62az zgozwu) un reveu - 2. *zskatze# |45 கருத்தாக சில சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பிக் கருத்துக் கூறிய போதிலும் அதில் சில சிறந்த சமுதாய நடைமுறை அனுபவக் கருத்துக்கள் வெளிப்படுவதையும் காண்கிறோம். தனது தாயை, தந்தையை, சிறப்பான தனது நண்பர்களை கிளைகளை, அண்ணனை, அரசனை, ஆபத்து வந்த போது கை விட்டுவிட்டு ஓடி வந்தவனை எப்படி நம்புவது என்று சுக்கிரீவன் கேட்கிறான். அரக்கர்கள் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள். நண்பர்கள் போல நடித்து நமக்குக் கேடு விளைவிப்பார்கள், சிற்றினத்தவருடன் சேருவது நமக்கு நல்லதல்லவென்று சாம்பவன் கூறினான். காலமே நோக்கினும் கற்ற நூல்களின் மூலமே நோக்கினும் நம்மிடம் வந்தவனுடைய சீலம் நோக்கியே நாம் தீர்மானிக்க வேண்டும் என்று நீலன்தான் நினைத்ததைக் கூறினான். கடைசியாகச் சொல்லின் செல்வன் அனுமன் தனது கருத்தைக் கூறுகிறான். நமது குற்றமற்ற அமைச்சர்கள் ஆராய்ந்து கூறிய கருத்துக்கள் நல்ல கருத்துக்கள்தான். என்றாலும் வந்துள்ளவன் தீயவன் என நான் சந்தேகம் கொள்ள மாட்டேன். வஞ்சகர் என்றால் அவருடைய முகத்தைக் கண்டவுடன் தெரிந்துவிடும். உள்ளத்தில் உள்ளதை முகங்கள் விளம்பிவிடும். கள்ளத்தின் விளைவெல்லாம் கருத்தில் தெரிந்து விடும். வாலியைக் கொன்று இளையவருக்கு அரசைக் ாடுத்த மூலவரின் வலியும் கொற்றமும் சீலமும் உணர்ந்து' தனக்கும் இலங்கை அரசைக் கொடுக்கத் தக்கவன் என்று உணர்ந்தே இங்கு வந்துள்ளான். அரக்கர் அரசு நெறியில்லாமல் நடக்கிறது. அத்துடன், இராவணனுடைய காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்து இப்போது இங்கு வந்து சேர்ந்துள்ளான். அத்துடன் இராவணனுடைய அவையில் பல நீதிநெறிகளையும் இவன் எடுத்துக் கூறியதை நான் நேரில் கண்டேன். என்னைக் கொல்லும்படி இராவணன் கூறியபோது துதுவரைக் கொல்லுதல் கூடாது என்று இவ்வீடணன் தடுத்தான். அவன் நீதிநெறி நிறைந்தவனாகக் காணப்பட்டான். அவனுடைய இல்லம் அந்தணரில்லம் போல் துய்மையாகக் காணப்பட்டது.