பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் | Հ | என் இனி உறுதியப் பால், இப்பணி தலை மேல் கொண்டேன் மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்” என்று கூறி சடை முடிதாங்கிக் காடு செல்லத் தயாரானான். இராமனுடைய இந்த வாசகங்களில் அவனுடைய தாய்ப் பாசமும் சகோதர பாசமும் பரதன் மீது அவன் கொண்டுள்ள அன்பும் மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இராமன் காடு செல்லத் தயாராகி விடை பெற்றுக் கொள்ள கோசலையிடம் செல்கிறான். கோசலை அவனைப் பார்த்தவுடன் ஐயம் கொண்டு “நீ முடி புனைவதற்கு இடையூறு ஏதேனும் உண்டோ”என்று கேட்கிறாள் அதற்கு இராமன் “மங்கை அம்மொழி கூறலு மானவன் செங்கை கூப்பி நின்காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான் என்றான்” இவ்வாறு குற்றம் இல்லாத குணம் நிரம்பிய எம்பி பரதன்’ என்று தனது அன்பையும் சகோதர பாசத்தையும் காட்டுகிறான். இராமனுக்குப் பட்டம் இல்லையென்று கேட்ட போதும் கோசலை நால்வர் மீதும் எந்தவித வேறுபாடும் காட்டாதவளாய் “முறைமை அன்றென்பது ஒன்று உண்டு, மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் குறைவிலன் எனக் கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்” “என்று பின்னரும் மன்னவன் ஏவியது அன்று எனாமை, மகனே உனக்கு அறன் நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி ஊழி பல, என்றாள்”