பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் I-9?Q5 சமுதாயப்-பார்வை-அ. சீனிவாசன் |6 | அறிநெறி முறைகளையும் அரசியல் நெறிமுறைகளையும் எடுத்துக்காட்டி, அரசன் அல்லாது நாடு இருக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறிப் பரதனைத் தனது கடமைப் பொருப்பான ஆட்சிப் பொருப்பையேற்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள். அமைச்சர்களும் அறிஞர்களும் எடுத்துக் கூறிய அறநெறிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் மறுப்புக் கூறிப்பரதன், தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியாது, காட்டிற்குச் சென்று இராமனை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து அவனுக்கே முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்கச் செய்வேனென்று கூறி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறான். மூத்தவனிருக்க இளையவன் எப்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியுமென்பதே பரதனுடைய வலுவான வாதமாகும். “மூன்று உலகினுக்கும் ஒர் முதல்வனாய் முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல் சான்றவர் உரைசெய் அத்தருமம் ஆய தேல் ஈன்றவள் செய்கையில் இழுக்குண்டாகுமோ”? என்று கூறுகிறான். இராமன் மூன்று உலகினுக்கும் முதல்வன். முதலில் பிறந்தவன், மூத்தவனிருக்க இளையோனாகிய நான் மகுடம் சூடுதலென்பது சான்றோர் உரைக்கும் தர்ம மென்றாகி விடுமுரினால் என்னை ஈன்றவன் செய்த செயலில் இழுக்கில்லை |ိ ஆகிவிடும். அந்தக் கொடுமைக்காளியான எனது அன்னை செய்த செயல் நல்லது. தான் என்று நீங்களெல்லாம் கூறுவீர்களானால் இன்றய கி மும் பின்வரவேண்டிய திரேதாயுகம், துவாபரயுகம் ಕ್ಲಿ" கலியுகம் தோன்றி அந்தக் கலிகாலம் வந்து விட்டதென்றல்லவா பொருள் பட்டுவிடுமென்று பரதன் கூறியதைக் கம்பனுடைய பாடல்கள் மிக நுட்பமாகவும், யுக தர்மங்களைச் சுட்டிக்காட்டியும் குறிப்பிட்டுக் கூறுகிறது. “அடைவரும் கொடுமை என் அன்னை செய்கையை நடைவரும் தன்மைநீர் நன்றிது என்றிரேல்