பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 172 துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர் முறையின் நீங்கிய அரசும் முந்துமோ?” என்று பரதன் கூறுகிறான். பரதன் தனக்குக் கொடுக்கப் பட்ட அரசு,தொன்று தொட்டு முன்னோர் வகுத்த முறைமைக்கு மாறானது என்பதற்கு கற்பிலேதவறிய பெண்களின் ஒழுக்கத்திற்கும், பொறுமை தவறிய தவத்திற்கும் அருள் நீங்கிய அறத்திற்கும் ஈடானது என்றும் அதைவிடத் தீமை மிக்கதென்றும் உவமை காட்டப்பட்டுள்ள சிறப்பான இலக்கியமாகும். உன் மீது கொண்டிருந்த அளவு கடந்த-இன்பினால் தந்தை தன் ஆவியைத் துறக்க, நீ நாடு துறந்து/காடு வந்து சேர, இந்தச் சமயம் பார்த்து வஞ்சகமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நான் என்ன உனது பகைவனா? என்று பரதன் கேட்கிறான். இங்கு ஒரு சிறந்த அரசியல் கருத்தும், நேர்மையும் சகோதர பாசமும் காட்டப் படுகிறது. அவ்வாறெல்லாம் பரதன் வாதிட்டு “உந்தை தீமையும் உலகுறாத நோய் தந்த தீவினைத்தாய் செய்தீமையும் எந்தை நீங்க மீண்டு அரசு செய் கெனா சிந்தையாவதும் தெரியக் கூறினான்.” உன் தந்தை செய்த தீமைகளையும் உலகம் இது வரையிலும் அடைந்திராத கொடிய துன்பத்தைக் கொடுத்த எனது தாய் செய்த தீமையும் என் மீதுள்ள பழியும் நீங்குவதற்கு நீ மீண்டும் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பரதன் இராமனிடம் வாதிடுகிறான். இங்கு 'உன் தந்தை” என்றும் ' தீவினைத்தாய்” என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது பரதனுடைய உள்ளத்தின் உணர்வு நிலையைக் காட்டுகிறது. இராமனும் தாய், “வரம் கொளத் தந்தை ஏவலால், மேய நம் குலத்தருமம் மேவினேன்” என்றும்