பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 186 “பின்குற்றம் மன்னும்பயக்கும் அரசு என்றல் பேனேன், முன்கொற்ற மன்னன் முடிகொள்கெனக் கொள்ள மூண்டது என் குற்றமன்றோ இகல் மன்னவன் குற் றம் யாதோ மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்” என்பது கம்பன் கவிதை வரிகளாகும். “ மேலும் நதியின் பிழையன்று நல்ல நீர் இல்லாமை. அதைப் போல இதில் நாட்டின் தலைவனான தசரத மன்னனின் பிழையு மில்லை. நம்மைப் பெற்ற தாய் கையேயியின் பிழையுமில்லை. தம்பி பரதனுடைய பிழையுமில்லை. மகனே, இது விதியின் பிழையாகும். அதற்காக நீ ஏன் கோபம் கொண்டாய்?” என்று இராமன் சமாதானம் கூறி இலக்குவனை அமைதிப்படுத்த முயன்றான். இது கம்ப நாடருடைய மிகப்பிரபலமான சிறந்த கருத்துக் கவிதைகளில் ஒன்றாகும். இதன் இலக்கிய நயத்தைப் பலமுறைப் படித்துப படித்து இன்புறலாம். “நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே பதியின் பிழையன்று, பயந்த நமைப்புரந்தான் மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை, நீ இதற்கு என் கொல் வெகுண்டது”? என்று இராமன் கூறுகிறான். இலக்குவன் இன்னும் அமைதியடையவில்லை. “உலையில் பொங்கும் தீ போல எனது உள்ளம் கொதிக்கிறது. அந்த உள்ளக் கொதிப்பை எப்படி ஆற்றுவேன். கோள் இழைத்த கையேயியின் அறிவுக்கு (அறிவீனத்திற்கு) புத்தி புகட்டுவதாய் வானவர்களுக்கும் வலிதான ஊழ்வினையையும் முறியடிப்பதாய் எனது வில்லின் வலிமையைக் காட்டுகிறேன்பார்” என்று மனம் குமுறுகிறான்.