பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 198 தசரதன் இறந்த செய்தி பற்றியும், பரதனுடைய துயரம் தோய்ந்த நிலை பற்றியும் இலக்குவனுக்குத் தெளிவாகத் தெரிந்த போது அவன் முழுமையாகத் தெளிவடைகிறான். அவனுடைய சொல்லும் சினமும், உணர்வும், வில்லும் அத்துடன் அவனுடைய கண்ணிரும் நிலத்தில் விழுந்தன. இலக்குவனிடம் மாற்றம் ஏற்பட, இராமனது அறிவுரைகளும், தோடர்ச்சியான முயற்சிகளும் தலையீடுகளும் அத்துடன் இலக்குவனுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவமும் உதவியாக இருந்தன. இலக்குவனிடத்தில் ஏற்பட்டுள்ள புதிய தெளிவு அயோத்தி சகோதரர்களுக்கிடையில் சொல்லாலும் செயலாலும் அறத்தாலும் கடமையாலும் முழு ஒற்றுமை ஏற்பட ஏதுவாகி அவ்வொற்றுமை முழுமை பெற்று மலர்ந்து காய் பிடித்துத் கனியாகிப் பழுத்து நின்றது. அயோத்தியின் ச ேகா த ர ர் க ளு க் கு கி ைட யி ல் ப ல பிரச்சனைகளும், சிக்கல்களும் தப்பெண்ணங்களும் அவ்வப்போது வெளிப்பட்டிருந்தாலும், இராமன் பரதன் ஆகியோருடைய சிறந் பண்புகளாலும், தியாக உணர்வாலும், அறநெறிக் ம்மையாலும் தலைமையேற்று வழிகாட்டும் அதனிவாற்றலாலும் தெளிவுபட்டு அவர்களுடைய முழுமையான மெச்சத்தக்க ஒற்றுமை உலகிற்கு எடுத்துக்காட்டாக அமைவதைக் கம்பன் தனது மகா காவியத்தில் மிகவும் அற்புதமாக எடுத்துக் காட்டியிருப்பது தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் பாரத பூமிக்கும் பெருமையளிப்பதாகும். வனவாசத்தில் அடுத்து வரும் வனவாச நிகழ்ச்சிகளில் இராம - இலக்குவர்களுடைய கூட்டு வாழ்க்கை, ஒன்று பட்ட செயல்பாடுகள், கிட்கிந்தை, இலங்கைப் பகுதிகளில் அவர்களுடைய சாகசங்களும் வீரச் செயல்களும் ஆகியவை அவர்களுடைய சகோதர ஒன்றுமை வெளிப்பாட்டின் அடுத்தக் கட்டமாகும். ஆரண்டு காண்டத்தில் இராமனும் இலக்குவனும் ஒன்றாக இருந்த காட்சியை சடாயுவின் வாயிலாகக் கம்பன் கூறுகிறார். “கருமலை செம்மலை அனைய காட்சியர் திருமகிழ் மார்பினர், செங்கண் வீரர் தாம் அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ !”