பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன் 201 தம்பி என்று குறிப்பிடுவது சிறப்பு மிக்கது. கோபம் வேகம் ஆவேசம் சீறிப்பாயும் குணம் கொண்ட இலக்குவன் இங்கு அன்பெனும் ஒர் அழகிய அணி பூண்ட தம்பியாக இராமனுக்கு அருந்துணையாக அண்ணனுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் செல்லும் தம்பியாகக் கம்பன் மிகவும் சிறப்பாகத் தனது காவியத்தின் காட்சியாகக் கொண்டு செல்கிறார். முன்னர் பரதனைச் செம்மையின் ஆணி என்று குறிப்பிட்ட கம்பன் இப்போது இலக்குவனை அன்பெனும் அழகிய அணி பூண்ட தம்பி என்று சிறப்பித்துக் கூறுவது நுட்பமாகக் கவனிக்கத் தக்கதாகும். இராமனும் இலக்குவனும் சுக்கிரீவன் தங்கியிருந்த மலையை நோக்கிச் சென்றார்கள். தொலைவிலிருந்து அவர்களைப் பார்த்துச் சுக்கிரீவன் முதலில் இவர்கள் யாரோ என்று சந்தேகப்படுகிறான். பின்னர் அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் சென்று அவர்களைச் சந்திக்கிறான். மாறு வேடத்தில் வந்த மாருதியை இராமன் புரிந்து கொள்கிறான். பரஸ்பரம் அறிமுகம் நடைபெறுகிறது. இராம இலக்குவர்களை அவர்கள் யாரென்று அனுமன் அறிய விரும்பிய போது இலக்குவன் பதிலளிப்பதாக உள்ள பாடல் இராமனுடைய சகோதரப் பற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது. “மனுவின் வழியில் வந்த அயோத்தி வேந்தன் தசரதனுடைய மகன் இவன், தனது தாயின் ஆணையை நிறைவேற்றுவதற்காகத் தனது உரிமையான ஆட்சிச் செல்வத்தை மிகவும் பெருந்தன்மையோடு மனமுவந்துத் தனது தம்பிக்குக் கொடுத்து விட்டு வனத்திற்கு வந்தவன் இவன் பெயர் இராமன் இவனுக்கு ஏவல் செய்யும் அடிமையான்” என்று இலக்குவன் கூறுகிறான். இங்கு இலக்குவன் வாயிலாக இராமன் தனது ஆட்சி உரிமையைத் தனது தம்பிக்கு நல்கியவன் என்று சூசகமாகக் கம்பன் குறிப்பிடுவது சிறப்பான இலக்கிய உத்தியாகும். இராமன் அயோத்தி அரசை அருமைத்தம்பி பரதனுக்கும், கிட்கிந்தை அரசை வாலியின் தம்பி சுக்கிரீவனுக்கும், இலங்கை அரசை இராவணன் தம்பி வீடணனுக்கும் கொடுத்தவனல்லவா? இது இராமாயணக் காவியத்தின் அரசியல் ரகசியங்களில் ஒன்றல்லவா?