பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 225 இங்கு சுக்கிரீவன் தனது அண்ணன் வாலியால் பட்ட துன்பங்களையும் மிகுந்த கவலையுடனும் விரக்தியும் அச்சமும் கொண்டும் விளக்கிக் கூறுவதையும் அதன் காரணமாக இராமனுடன் நட்பு பூண்டதையும் காண்கிறோம். வாலி சுக்கிரீவன் கதையை இராமனிடம் அனுமன் விவரமாக விளக்கிக் கூறுகிறான். வாலி வரம்பில்லாத வலிமை படைத்தவன். இந்திரன் புதல்வன், ஒரு தடவை மாயாவி என்னும் ஒரு அவுனன் அவனிடம் போர் புரிய வந்தான். வாலி சுக்கிரீவன் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மாயாவியை எதிர்த்தப் போரிட்டார்கள். மாயாவி தோற்றுப் போய் ஒரு பிலத்திற்குள்ளே ஒடி ஒளிந்து கொண்டான். வாலி அவனை விரட்டிக் கொண்டே பிலத்திற்குள் அவனை தொடர்ந்து சென்றான். வாலி பிலத்திற்குள்ளே போய் இரண்டாண்டுகளுக்கு மேலாகி விட்டது. வாலி திரும்பவில்லை. சுக்கிரீவன் கவலை கொண்டு தன் அண்ணனைத் தேடப் பிலத்திற்குள் போவதற்குப் புறப்பட்டான். அப்போது வானரர்கள் சுக்கிரீவனைத் தடுத்து, வாலி திரும்பி வர மாட்டான். மாயாவி அவனைக் கொன்றிருப்பான் எனக் கூறி வற்புறுத்தி/சுக்கிரீவனை அரசனாக்கி விட்டார்கள். மாயாவி திரும்பி வந்தால் என்ன செய்வது என்று பயந்து பிலத்தின் வாயைப் பெரும் கற்களால் மூடிவிட்டனர். பல நாள் கழித்து மாயாவியைக் கொன்று விட்டு வாலி திரும்பினான். பிலத்தின் வாய் மூடப் பட்டிருந்தது. அதைக் கண்ட_வாலி கடுங்கோபம் கொண்டு மூடியிருந்த கல்லைக் காலால் உதைத்தள்ளி விட்டு வெளியே வந்தான். அவனைக் கண்டதும் சுக்கிரீவன் பயந்து அண்ணனைப் பணிந்து அவனிடம் அரசை ஒப்படைத்தான். ஆயினும் வாலிக்குத் தனது தம்பி மீது சந்தேகம் ஏற்பட்டு அவனை அடித்துக் கொல்ல நினைத்தான். சுக்கிரீவன் தப்பி ஓடினான். வாலி அவனை விரட்டி விரட்டி அடித்தான். எங்கு சென்றாலும் துரத்தினான். கடைசியில் இம்மலைக்கு வந்து சேர்ந்தோம். வாலி, சுக்கிரீவனை அடித்து விரட்டி விட்டு அவனுடைய மனைவியையும் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டான். “எந்தை! மற்றவன் எயிறு அதுக்கு மேல் அந்தகற்கும் ஒர் அரணம் இல்லையால்