பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 232 படுவது என்ன நியாயம்? உனக்கு ஏற்பட்ட பகையைப் போக்கிக் கொள்ள அயலார்களைத் துணைப்பிடிப்பது மேகம் போன்ற யானையைப் பிடிக்க வரும் சிங்கத்தை எதிர்த்து ஒரு முயலைத் துணையாகப் பிடிப்பதைப் போல் அல்லவா இருக்கிறது. உன் முயற்சி, சந்திரனுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போல சூரியன் மரபுக்கும் ஒரு களங்கத்தை உண்டாக்கி விட்டாயே! மற்றவன் ஒருவன் என்னை வம்புக்கு இழுத்தான். அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த என்னை ஒளிந்து நின்று என் மீது கணை ஏவிய நீ நான் விழுந்த பின்னர், என் மண்ணில் சிங்கம் போல நிமிர்ந்து நிற்கிறாய் போலும்! சாத்திர நூல்கள் கூறிய நன்னெறிகளையும், உனது முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகளையும் சீலத்தையும் நீ போற்றவில்லை. நீ வாலியை அழிக்கவில்லை, அரச நீதியின் வேலியை அழித்து விட்டாய் !. உன் தாரத்தை மற்றொருவன் கொண்டு போய் விட்டதால் உன் கையில் உள்ள வில்லின் வீரம் பழுது பெற்று விட்டதோ? நிராயுத பாணியாக இருந்த என் மீது அம்பெய்யத் தானா நீ வில்வித்தை கற்றது? என்றெல்லாம் வாலி அடுக்கடுக்காக இராமன் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தான். வாலியின் இந்தக் கேள்விகளிலெல்லாம் பெரும்பாலும் அரசியல் நெறி, நீதிநெறி அறநெறி பற்றியவைகளாகவே இருந்தன. சகோதர உறவு பற்றிய நெறி ஒன்று இருக்கிறது. வாலி பேசியதை முழுமையாகவும், அமைதியாகவும் கேட்டுக் கொண்டிருந்த இராமன் அடுத்து வாலியின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகிறான். “பிலத்திற்குள் சென்றாய். பல நாட்கள் கடந்தும் நீ திரும்பவில்லை. எனவே உனது குலத்திலே பிறந்து அறிவு நிரம்பிய உனது தம்பியை ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் படி முதியோர்கள் கேட்டுக் கொண்டனர். அரசில்லா விட்டால் அழகில்லை என்று வற்புறுத்தினார்கள். “எனக்கு மூத்தவன் ஆளப் பிறந்தவன் அவன் மாண்டால் நானும் மாள்வேன், நான் மட்டும் உயிர் வாழ்ந்து அரசாள ཟླ་ _ ཟན། ཟན།། மாட்டேன். ஊனமான யோசனைகளைக் கூறாதீர்கள்” என்று உன் தம்பி கூறினான். இருந்தும் படைத்தலைவர்களும், முற்றும் உணர்ந்த முதியவர்களும் மற்றும் பலரும் வற்புறுத்திய காரணத்தால் அவன் அரசுப் பொறுப்பை ஏற்றான். அவன் குற்றமில்லாதவன். நீ வந்தவுடன் உன்னை வணங்கி மகிழ்ந்து உன்னிடம் அரசை ஒப்புவித்தான். நீ