பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை- அ. சீனிவாசன் 255 “புத்திரர், குருக்கள், நின்பொரு இல் கேண் மையர் மித்திரர், அடைந்துளோர் மெலியர் வன்மையோர் இத்தனை பேரையும் இராமன் வெம் சரம் சித்திரவதை செயக் கண்டு தீர்தியோ?” “எத்துணை வகையினும் உறுதி எய்தின ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை அத்த! என் பிழை பொருத்து அருளுவாய்” என உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்” எத்தனையோ வகையிலும் உனக்கு நன்மைகள் எய்தவும், நீதிக்குரிய பொருள்களைக் கூறியும் நீ உணரவில்லை. என்னை மன்னிப்பாயாக என்று கூறி உத்தமனான வீடணன் தன் நண்பர்களுடன் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்று விட்டான். அனலன், அநிலன், அரன், சம்பாதி ஆகிய அமைச்சர்கள் நால்வரும் வீடணனுடன் சேர்ந்து சென்றனர். அவர்கள் ஐவரும் ஆலோசனை செய்து கடலைக் கடந்து இராமன் இருந்த இடத்தை அடைந்தனர். இராமன் நண்பர்கள் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்து வீடணனைத் தனது பரிவாரத்துடன் சேர்த்துக் கொண்டான். அவனுக்கு இலங்கையின் அரசுப் பட்டத்தையும் சூட்டி ஆதரித்தான். “விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வியா அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய களவியல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி” என்றான். வீடணனுக்கு தனது அண்ணன் மீது மிகுந்த மரியாதையுண்டு. ஆயினும் அவன் அறநிலையிலிருந்து தவறி விட்டான் என்பதால் அவனிடம் பயந்தும் வெறுப்படைந்தும் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் அடைக்கலம் சேர்ந்தான். இராமனும்