பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரதவமும சகோதரர்களும் 258 முதல் நாள் போரில் இராவணன் தோல்வியடைந்து “இன்று போய் போர்க்கு நாளை வா’ என்று இராமன் கூற “வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவற்கேற்ப நயம் பட உரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போக்கி வெறுங் கையோடு இலங்கை புக்கான்” என்று இராவணனுடைய பெருமைகளை விவரித்து அவன் சிறுமையடைந்த இக்காட்சியை சுட்டிக் காட்டிக் கம்பன் மிகவும் அழகாகக் குறிப்பிடுகிறார். கும்பகருணனைப் போருக்கு அனுப்ப ஏற்பாடு நடைபெறுகிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவனைப் எழுப்புவதற்கு இராவணன் கட்டளையிட்டான். 'உறங்கு கின்றகும்பகன்ன ! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்ற தின்று காண் ! எழுந்திராய்! எழுந்திராய் ! கறங்கு போல வில் பிடித்த கால துரதர் கையிலே உறங்குவாய் ! உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்”! என்று ஒரு அருமையான பொருள் நிறைந்த தாலாட்டுப் பாடலைக் கம்பன் கவிதையாக இங்கு காண்கிறோம். m இராவணன் தம்பி கும்பகருணன் ஒரு மிகச் சிறந்த பாத்திரப் படைப்பாகும். நல்ல உறக்கம், பெரும் தீனி, பிரம்மாண்டமான பெரிய உடல், பெரிய சதை மலை, அபாரமான வல்லமை மிக்கவன், வாழ்க்கையின் பாதி நாள் உறக்கம் இது ஒரு நுட்பமான தத்துவம். "வேத நூல் பிராயம் நூறு மனு சர்தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினை ஆண்டு