பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரதவமும சகோதரர்களும் لا تم “ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறைவன் இராமன் நின்றான், மாற்றரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற; தோற்றல் எம் பக்கம் ஐய, ! வெவ்வலி தொலைய வந்தாய்” ஐயா, வீடனா, நீ அந்த வில்லோனை, இறைவனை, இராமனை, அவன் தம்பியை மற்றவர்களை விட்டு விட்டு கூற்றமும் விதியும் கொல்லவிருக்கும் எங்கள் பக்கம் ஏன் வந்தாய் என்று கேட்கிறான். நீ அயோத்தி வேந்தர்க்கு அடைக்கலமாகி விட்டாய். நீ அங்கே இல்லாமல் போய் விட்டால், அரக்கர்களாக உள்ள நாங்களெல்லாம் இராமனுடைய கணைகளால் அடிபட்டு இறந்து பாழ் பட்ட பின்னர், எங்களுக்கு எள் நீர் இறைத்து இறுதிக் கடன் செய்ய யார் இருக்கிறார்கள். 'அய்ய நீர் அயோத்தி வேந்தர்க்கு அடைக்கலம் ஆகி ஆங்கே உய்கிலை என்னின் மற்று இவ்வரக்கராய் உள்ளோம் எல்லாம் எய்கனை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் கய்யினால் எள் நீர் நல்கிக் கடன் கழிப்பா ரைக் காட்டாய்” என்று உணர்ச்சி ததும்ப எடுத்துக் கூறுகிறான். எனவே இலங்கையில் உள்ள தீயோரெல்லாம் மாண்ட பின்னர், திருவுறை மார்பனான இராமனுடன் இவ்விலங்கை வந்து அதன் அரசுச் செல்வத்தை விரைவில் அடையப் போகிறாய் எனவே இராமனிடம் திரும்பப் போ என்று கும்பகருணன் தனது தம்பியிடம் உருக்கமாக எடுத்துக் கூறுகிறான். அதற்கு வீடணன், “எனக்கு உன்னிடத்தில் சில வேலைகளும் உள்ளன. அதனால் தான் நான்